எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.12  மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் கொட்டும் மழையிலும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் இடைவிடாது சனிக்கிழமை மரியாதை செலுத் தினர்.

சென்னை மெரினா கடற் கரையில் அமைந்துள்ள கலை ஞரின் நினைவிடம் சனிக்கிழமை அருகம்புல் மற்றும் மலர்களால் உதயசூரியன் வடிவில் அலங் கரிக்கப்பட்டிருந்தது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு 7.45 மணிக்கு கலைஞரின் நினைவிடத்துக்கு வந்தார். நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் நினைவிடத்தில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன் னாள் அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோ ரும் மரியாதை செலுத்தினர்.

முக்கிய பிரமுகர்கள்: முன் னாள் டிஜிபி அலெக்சாண்டர், நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன், மயில்சாமி, மனோபாலா, நடிகை ஜெயசித்ரா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத் தினர். கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கொட்டும் மழையிலும்: சென்னை முழுவதும் சனிக் கிழமை இடைவிடாமல் மழை பெய்தது. இதைப் பொருட்படுத் தாமல் கலைஞரின் நினை விடத்தில் மக்கள் வரிசையில் நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தியோருக்கு சனிக்கிழமை மதியம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப் பட்டன.

அமைதிப் பேரணி: கலை ஞரின் மறைவையொட்டி, திமுக வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அமைதி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகர் பேருந்து நிலையத்திலிருந்து, கலைஞர் பொன்விழா வளைவு வரை இப்பேரணி நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கேரளத்துக்கு ரூ. 1 கோடி வெள்ள

நிவாரணம்: புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி, ஆக.12 வெள்ளப் பாதிப்பில் சிக்கி தவிக்கும் கேரளத்துக்கு புதுவை அரசு சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப் படும் என அம்மாநில முதல்வர் வே.நாராயணசாமி

தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கேரளத்தில் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் சனிக்கிழமை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது, புதுவை அரசு சார்பில் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதைச் செய்ய தயாராக உள்ளோம் என அவரிடம் தெரிவித்தேன். கேரளத்துக்கு புதுவை அரசு சார்பில் ரூ. ஒரு கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும்.

அதுமட்டுமன்றி, மீட்புப் பணிகளுக்காகவும், அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் உதவி செய்ய முதல்வர் நிவாரண நிதியில் தனிக் கணக்குத் தொடங்கி வசூலித்து கேரளத்துக்கு அனுப்ப உள்ளோம். கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட மாஹே பகுதி உள்ளது. ஆகவே, புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் தங்களால் இயன்றளவு உதவி செய்ய வேண்டும்.

மருந்துகள், துணிகள், அரிசி போன்ற நிவாரணப் பொருள்களை வழங்க நினைப்பவர்கள் தாராளமாக கொடுத்து உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner