எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஆக.12 பெரியார் மருந்தியல் கல்லூரியில் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்  டாக்டர்

மு. கருணாநிதி அவர்களை நினைவு கூறும் இரங்கல் கூட்டம் 11.08.2018 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தமது இரங்கலுரையில் மறைந்த முன்னாள் முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான மாண்புமிகு டாக்டர்

மு. கருணாநிதி அவர்கள் தமிழினத்தின் முன்னேற்றத் திற்கும், தமிழர்களின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர்கள் என்றும் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் வாழ்நாள் மாணவராகவும் நமது தமிழர் தலைவர் ஆசிரியர்  அய்யா அவர்களின் உற்ற தோழராகவும்,  உடன்பிறவா சகோதரருமாகவும் திகழ்ந்து திராவிட கருத்துக்களை செல்லுமிடமெல்லாம் பறைசாற்றியவர்கள் என்றும் உரையாற்றினார்.

மானமிகு சுயமரியாதைக்காரன்

மேலும்  தன்னை மானமிகு சுயமரியாதைக்காரன் என்று அடையாளப்படுத்திக் கொண்ட சிறப்பிற்குரி யவர்கள்.   2006ஆம் ஆண்டில் மருந்தியல் கல் லூரியின் நூலகக் கட்டடத்தினை அப்பொழுது தமிழக முதலமைச்சராக திகழ்ந்த மாண்புமிகு கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தவுடன் நமது நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் இந்நூலகத்திற்கு கலைஞர் மு. கருணாநிதி நூலகம் என்று பெயர் சூட்டினார். அதற்கு கலைஞர் அவர்கள் பெரியார் என்ற இந்தப் பூங்காவில் நூலகம் என்ற நுண்ணிய கொடியாக இருந்துவிட்டு செல்கிறேன் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்கள்.

மேலும் தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இந்த அறிவுக்கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள் கைகள், வீரமிக்க அறைகூவல்கள்  அனைத்தையும் கட்டிக்காக்க யார் இருக்கிறார் என்ற சந்தேகத்தை யெல்லாம் தூள், தூளாக்கி இன்றைக்கு எல்லாவற் றையும் திறம்பட செம்மையாக நடத்திக்கொண்டி ருப்பவர் தமிழர் தலைவர்  அவர்கள் என்றும் உரை யாற்றினார்கள்.

அத்தகைய சிறப்பிற்குரியவர்களெல்லாம் தடம் பதித்த இக்கல்லூரியில் படிப்பதற்கு மாணவர்களாகிய நீங்களும், ஆசிரியர்களாகிய நாங்களும் பெருமை யடைய வேண்டும்.

நம்முடைய மக்கள் பல்கலைக் கழகமாம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை திறந்து வைத்த பெருமைக்குரியவர் நம்முடைய    கலைஞர் அவர்கள் என்று எடுத்துக்கூறி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், கொள்கைக் குடும்பத்தினர், கழகக் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் இரங்கலை தெரிவித்து,  பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வீரவணக்கத்தை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner