எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.13 குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழைப் பதிவேற்றக் கோருவது குறித்த தகவலை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, குரூப் 4 தேர்வுடன் இணைந்து முதல் முறையாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினர்.

தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், கிராம நிர்வாக அலுவலர் பிரிவில் 494 இடங்கள் காலியாக இருந்தன. ஆனால், இப்போது, இது 1,107 இடங்களாக அதிகரித்துள்ளது. தேர்வு அறிவிக்கை வெளியிடப் பட்ட நேரத்தில் ஒட்டுமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 351 ஆக இருந்தது. இது இப்போது 11 ஆயிரத்து 280-ஆக உயர்ந் துள்ளது. இந்த இடங்களுக்கும் சேர்த்தே கலந் தாய்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தி ருந்தது.

சான்றிதழ் பதிவேற்றம்: தேர்ச்சி பெற்றவர்களின் சான்றி தழ்களை சரி பார்க்கும் பணிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளன. முன்னதாக, சான்றிதழ்களை ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்ய வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி. ஏற்கெனவே கோரியிருந்தது. சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் பணி இந்த மாத இறுதியில் முடிக்கப்படும் எனத் தெரிகிறது.

அக்டோபர் கடைசி வாரத் தில் பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர் பான தகவல்கள் தேர்வர்களுக்கு மின்னஞ்சல், செல்லிடப்பேசி குறுஞ்செய்தி போன்றவற்றின் மூலமாகத் தெரிவிக்கப்பட்டு வருவதாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner