எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லியில் நடைபெறும் தொழிலாளர் - விவசாயிகள் பேரணியில்

அங்கன்வாடி ஊழியர்கள் 1000 பேர் பங்கேற்க முடிவு

சென்னை, ஆக. 13-  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற் றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வடசென்னை சிஅய்டியு அலு வலகத்தில் மாநில துணைத் தலைவர் சித்திரச்செல்வி தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது.

வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி டில்லியில் நாடா ளுமன்றத்தை நோக்கி நடை பெறும் தொழிலாளி-விவசாயிகள் பேரணியில் தமிழகத்திலிருந்து ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்பது என தீர்மா னிக்கப்பட்டது. அங்கன்வாடி தனியார்மயத்தை தடுக்கவும், மத்திய அரசு நிதிஒதுக்கீட்டை வெட்டிச்சுருக்கக் கூடாது எனக் கோரியும் நாடு முழுவதும் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில் தமிழகத்திலிருந்து 50 லட்சம் பேரிடம் கையெ ழுத்துகள் பெறுவது என முடி வெடுக்கப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக் கான ஒரு நபர் குழு , அங்கன்வாடி ஊழியர்களின் பணிநிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய முக்கியமான கோரிக்கைகள் மீது விரைவாக தீர்வுகாண வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. கூட்டத் தில் சிஅய்டியு நடத்தும் அய னாவரம் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய்நிதியைசிஅய்டியுமாநி லப் பொருளாளர் மாலதிசிட்டி பாபு, மாநிலதுணை பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான் ஆகியோரிடம் வழங்கினர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்டெய்சி,பொரு ளாளர் பாக்கியம், மற்றும் மாநிலநிர்வாகிகள்என்.சுசிலா, எஸ்.ரத்தின மாலா, எஸ்.தேவ மணி மற்றும் வடசென்னை மாவட்டத் தலைவர் வி.ருக் மணி, மாவட்டச் செயலாளர் என்.நிர்மலா பொருளாளர் பி.மணிமாலா உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner