எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திமுக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக.16 தந்தை பெரி யார் ஒளியில் பேரறிஞர் அண்ணா நெறியில் கலைஞர் நடந்து காட் டிய வழியில் திமுக தொடர்ந்து நடைபோடும் என்று திமுக செயல்தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார். கடிதம் வருமாறு:

தலைவருக்கு இரங்கல் என் பதும் நினைவேந்தல் என்பதும் வெறும் சடங்கல்ல, சம்பிரதாய மல்ல. இலட்சியம் காப்பதற் கான சூளுரை. அவர் முன்னெ டுத்த போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு, வெற்றி நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம் என்பதற்கான உறுதியேற்பு. அந்த மன உறுதி யைத் தலைவரிடமிருந்தே பெறுகிறோம்.

மறைந்துவிட்ட தலைவரி டமிருந்து மன உறுதியைப் பெற முடியுமா? இதுதான் பகுத் தறிவா? என சிலர் எண்ணிடக் கூடும். அவர்களுக்கெல்லாம் உங்களில் ஒருவனான நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், மனதிடத்து டன் போராடிய வீரர்கள் பலர் உண்டு. மரணத்தின் விளிம்பில் நின்றபோதும் மண்டியிடாமல் போரிட்ட மாவீரர்கள் சிலர் உண்டு. ஆனால், மரணத்திற்குப் பிறகும் தனது போராட்ட உறுதி குலையாமல், கொள்கை எனும் ஆயுதத்தைக் கைவிடாமல் களத்தில் நின்று வெற்றி பெற்ற வீரத்தலைவர் என்ற புது வர லாறு படைத்தவர் நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்கள்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவிடம் தலைவர் கலைஞர் இரவலாகப் பெற்ற இதயத்தை, அந்த அண்ணனின் கால் மலரில் பத்திரமாக வைப் பதற்கு மரணத்திற்குப் பிறகும் கலைஞர் நடத்திய சட்டப் போராட்டமும் அதில் அவர் பெற்ற வெற்றியும் சரித்திரச் சாதனையாகும்.

மானம் அவன் கேட்ட தாலாட்டு

மரணம் அவன் ஆடிய விளையாட்டு

என்று, தான் எழுதிய கவிதை வரிகளுக்கேற்ப, மரணத்தின் உச்சியில் நின்றும் மானத்துடன் போராடிய மறத்தமிழர் நம் தலைவர். அதனால்தான் அவ ரிடமிருந்தே எப்போதும் நாம் மன உறுதியினைப் பெறுகி றோம்.

எந்த நிலையிலும் குலை யாத எஃகு உள்ளம் கொண்ட வர் தலைவர் கலைஞர். நெருக் கடி நிலையா, எதிரிகளின் வசவா, வீண்பழியா, ஆட்சிக் கலைப்பா, தேர்தல் தோல்வியா, தொடர்ந்து துரத்தும் துரோகங்களா, துயரம் தரும் பிரிவுகளா எதுவாக இருந் தாலும் அதனை இயல்பாக எதிர்கொண்டு கழகத்தைக் காத் ததுடன், அந்தக் கழகம் காக் கும் தன் உயிரினும் மேலான உடன்பிறப்புகளையும் கண் போலக் காத்தவர்.

அரை நூற்றாண்டு காலம் கழகத்தின் தலைமைப் பொறுப்பை திறம்பட ஏற்று, கட்டுக்கோப்பு குலையாமல் வைத்திருந்தது டன், இப்படிப்பட்ட பேரியக் கத்தில் இத்தனை ஜனநாயகமா என இந்தியத் தலைவர்களும் வியக்கும்படி வழிநடத்தியவர். நாம் நடந்து செல்லும் பாதை யெல்லாம் அவர் போட்ட வையே! நாம் காணுகின்ற திசையெல்லாம் அவர் ஒளியே!

கலைஞர் என்பது வெறும் பெயரல்ல. அது திராவிட இனத் தின் நிரந்தர அடையாளம். தமிழ்க் குலத்தின் பெருமைமிகு வரலாறு. கலைஞர், மரணம் கடந்தவர்.  அவர் உயிர் பிரிய வில்லை. ஒவ்வொரு உடன்பி றப்பின் உணர்விலும் கலந்தி ருக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர் கள் மறைந்தபோது கழகத்தை யும், அரசையும் தன் இரு தோள்களில் தாங்க வேண்டிய பெரும் பொறுப்பு தலைவர் கலைஞருக்கு இருந்தது. பன் முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞர் அவர்களே அந்தப் பொறுப்புச் சுமையைத் தாங்கு வதற்கு எதையும் தாங்கும் தன்மை கொண்ட பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டார். நான், கலைஞரல்ல. கலைஞரின் மகன் என்ற பெருமையும், அதைவிட அவரது உடன்பிறப்புகளான உங்களில் ஒருவன் என்கிற உரி மையும், கழகத்தின் தலைமைத் தொண்டனாக இருந்து செயல் பட வைக்கிறது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்வதற் காகத்தான், ஜூன் 3ஆம் நாள் திருவாரூரில் நடைபெற்ற தலை வர் கலைஞரின் பிறந்தநாள் விழாவில், அவரது ஆற்றலில் பாதியைக் கேட்டேன்.

தலைவர் கலைஞர் நம்மை விட்டுச் சென்றுள்ள நிலையில், அவர் வழங்கிய ஆற்றலைக் கொண்டு, கழகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை துணிந்து ஏற்றுள்ளேன். அவரது அன்பு உடன்பிறப்புகள் என்றென்றும் பக்கபலமாக இருப்பார்கள் என்கிற அசையாத நம்பிக்கை தான் இந்தத் துணிவுக்குக் காரணம். வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடியவர்கள் என் உடன்பிறப்புகள் எனத் தலை வர் கலைஞர் அவர்கள் பெரு மிதத்துடன் குறிப்பிடுவார். அத்தகைய உடன்பிறப்புகளின் பெருந்துணை உள்ளவரை எனக்கு கவலையில்லை.

நாம் நிறைவேற்றி முடிக்க வேண்டிய சவாலான பணிகள் நிறைய இருக்கின்றன. கழக ஆட்சியில் அனைத்துத் துறை களிலும் சிகரமாக உயர்ந்திருந்த தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் மாநில ஆட்சியாளர்கள். மதவெறியை விதைத்து - மாநில உரிமைக ளைப் பறித்துக் கொண்டிருக்கி றார்கள் மத்திய ஆட்சியாளர்கள். தலைவரை இழந்த கழகத்தில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட அக்கறை காட்டுகி றார்கள் அரசியல் எதிரிகள். ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கலாமா என நப் பாசை கொண்டிருக்கிறார்கள்.

நான் கலைஞரால் வளர்த் தெடுக்கப்பட்டவன். சலசலப்பு களுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன், கலைஞ ரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் துணையோடு!

தந்தை பெரியாரின் ஒளி யில், -பேரறிஞர் அண்ணா காட் டிய நெறியில் -தலைவர் கலை ஞர் நடந்த வழியில் தொடர்ந்து நடைபோடுவோம். தொய் வின்றி செயல்படுவோம்.

உடன்பிறப்புகளே உங் களை நம்பி உறுதியேற்கிறேன். உங்களின் ஒருவனாகப் பய ணிக்கிறேன். கலைஞரின் மக னாக உங்களிடம் நிற்கிறேன். சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, மதநல்லிணக்கம், காக்கும் கலைஞரின் இலட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற சூளு ரைப்போம். செயலாற்றுவோம். வெற்றிச் சுடர் ஏந்துவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner