எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, ஆக. 17- திண்டுக்கல் லில் நடைபெற உள்ள பெரி யார் பிஞ்சுகள் மாநாட்டை ஒட்டிய சிறப்பு வினாடி & வினா போட்டிகளின், வடக்கு மய்யத்துக்கான முதல் கட்ட போட்டி, தருமபுரி பெரியார் மன்றத்தில் 12.8.2018 அன்று மதியம் 12 மணியளவில் நடை பெற்றது.

சேலம், மேட்டூர், ஆத்தூர், தருமபுரி, கிருட்டினகிரி, திருப் பத்தூர் கழக மாவட்டங்கள் உள்ளடக்கிய தேர்வு மய்யத்தில் 27 பெரியார் பிஞ்சுகள் போட் டியில் கலந்து கொண்டனர்.

முதல் சுற்று போட்டி சரி யான விடையை தேர்ந்தெடுக்க எழுத்து தேர்வாக நடைப்பெற் றது. எழுத்துத் தேர்வு விடைத் தாள்கள் ஆசிரியர்கள் கதிர் செந்தில், மாரிக்கருணாநிதி, இர.கிருட்டினமூர்த்தி ஆகியோ ரால் மதிப்பீடு செய்யப்பட்டு அதில் உள்ள 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒரே மதிப்பெண்கள் (43) பெற்ற 4 மாணவர்களுக்கு மீண்டும் ஒரு குறுக்குத் தேர்வு நடத்தப் பட்டு, அதில் ஒருவர் தேர்ந்தெ டுக்கப்பட்டு 10ஆவது போட்டி யாளராக இணைத்துக் கொள் ளப்பட்டார்.

இரண்டாம் சுற்று போட்டி 10 மாணவ பிஞ்சுகள் இடையே நடத்தப்பட்டது. அதிலிருந்து ஒன்று முதல் நான்கு வரை மதிப் பெண் பெற்றவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவ பிஞ்சுகளும் நல்ல மதிப்பெண் கள் பெற்றார்கள்.

வினாடி & வினா போட் டியை திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் இளைய.மாதன், திராவிட முன்னேற்ற கழக ஆதி திராவிடர் நலக்குழு துணைச் செயலாளரும் மற்றும் அரூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவருமான சா.ராஜேந்திரன் ஆகிய இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர்.

பெரியார் 1000 நூலிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் தலைமையிலிருந்து அனுப்பப் பட்ட கேள்விகள், ஒளிப்படங் கள் குறித்த கேள்விகள், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து வினாத்தாள்கள் உருவாக்கப்பட் டன. வினாத்தாள் ஒருங்கி ணைப்பு குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர் கழக மாவட்ட செயலாளர் தோழர் மா.செல்லதுரையின் மிகச்சிறந்த ஒத்துழைப்போடு, மாணவர் கழக தோழர் ஜனக ராஜ், சந்திரபோஸ் மற்றும் நகர கழக அமைப்பாளர் ராமச்சந்தி ரன் ஆகியோர் சிறப்பாக செய் தனர்.

மாணவர்களுக்கு தேர்வு எழுதும் முறை குறித்து மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஒரு சிறப்பான விளக்க உரை ஆற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த பகுத்தவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரி சாமி அவர்களுடன் இணைந்து மாநில பகுத்தறிவாளர்கள் கழக பொறுப்பாளர்கள் மாணவர் களை வாழ்த்தி உற்சாகப்படுத் தினர்.

கிருஷ்ணாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் பகுத்தறிவு ஆசி ரியரணி பொறுப்பாளர் கே. ஆர்.குமாரின் ஏற்பாட்டில் 9 மாணவர்கள் சிறப்பாக பங் கேற்றனர்.

கலந்து கொண்ட

மாணவர்கள்

செ.வி.யாழ்இலக்கியா & 7ஆம் வகுப்பு, ர.பிரியதர்ஷிணி & 5ஆம் வகுப்பு, செ.மே.இனியன் பிரபாகரன் & 5ஆம் வகுப்பு, அ.அபிநயா & 9ஆம் வகுப்பு, அ.அஸ்மிதா & +1, மு.ச.மென்மை & +1, ஜெ.அருண்குமார் & +1, இல.மணிகண்டன் +1, ச.ஜெயபிரபு & +1, க.விடுதலை விவேகன்  & 6ஆம் வகுப்பு, இரா.கனி மொழி & 10ஆம் வகுப்பு, மு. விமல்ராஜ் & 10ஆம் வகுப்பு, கா.சங்கரி, கா.திலிப்ராஜ்  & +2, ப.சுதாகர் & 9ஆம் வகுப்பு, மா.திருப்பதி & 8ஆம் வகுப்பு, க.சின்னச்சாமி & 9ஆம் வகுப்பு, மு.முகமதுநபி & 7ஆம் வகுப்பு, பெ.சந்துரு & 10ஆம் வகுப்பு, மு.தினேஷ் & +1, பெ.நரசிம் மன் & +1, ம.கதிரவன் & +1, ம.நிலவன் & 8ஆம் வகுப்பு, பு.மகிழன் & 5ஆம் வகுப்பு, ம.செம்மல் வீரமணி & 5ஆம் வகுப்பு, மு.ச.தென்னரசு பெரி யார் & 9ஆம் வகுப்பு, மு.சஞ்சய் & 7ஆம் வகுப்பு

போட்டித் தேர்வு மேற்பார் வையாளர்களாக தோழர்கள் மண்டல இளைஞரணி செயலா ளர் வண்டி ஆறுமுகம்,  மகளி ரணி தலைவர் கவிதா காமராஜ்  ஆகியோர் வெகுசிறப்பாக பணியாற்றினார்கள்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள்

மு.ச.தென்னரசு பெரியார் & முதலிடம், ம.கதிரவன் &  இரண்டாம் இடம், ம.நிலவன் & மூன்றாம் இடம், கு.தினேஷ் & நான்காம் இடம்.

களப்பணியாற்றியவர்

மாவட்டத் தலைவர் இளைய. மாதன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயரா மன், மண்டலத் தலைவர் பெ.மதிமணியன், மண்டலச் செயலாளர் கரு.பாலன், இளை ஞரணி மண்டல செயலாளர் வண்டி ஆறுமுகம், நகரத் தலைவர் பாப்பாரப்பட்டி மா.சுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் க.கதிர், சுயமரியாதை திருமண நிலைய பொறுப் பாளர் நளினி கதிர், ஒன்றிய தலைவர் காரி மங்கலம் இரா.ராமசாமி, மருத்துவர் அணி மருத்துவர் ஜெ.கனிமொழி, வாசகர் வட்ட அமைப்பாளர் ஊமை பீமன், மாணவர் கழக அமைப்பாளர் பீம. வி.பி.சிங், மாணவர் கழக பொறுப்பாளர் பா.அறிவுக்கரசு, மாணவர் கழக மாரவாடி அரிஸ், பெரி யார் பிஞ்சு கதிர் ஆதவன், கிருஷ் ணபுரம் ஆசிரியர் இளவரசன்.

மாணவர் கழக செயலாளர் மா.செல்லதுரை நன்றி கூறி னார். மாணவர்கள், தேர்வாளர் கள், மேற்பார்வையாளர்கள், களப்பணியாளர்கள், இயக்க தோழர்கள் மற்றும் ஒருங்கி ணைப்பாளர் ஆகியோருக்கு அரூர் சா.ராஜேந்திரன் மதிய உணவு வழங்கி மேலும் நிகழ் விற்கு பெருமை சேர்த்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner