எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.17 பி.இ. துணைக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் இன்று (ஆக.16) முதல் விண் ணப்பிக்க லாம் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள், பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் பொறியியல் இடங்களில் சேர்த் துக் கொள்ளப்படுவர்.

இதற்கு வியாழக்கிழமை முதல் ஆன்-லைனில் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ஆம் கடைசி நாளாகும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்சிஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

கடன் அட்டை, பற்று அட்டைகள் மூலமாக ஆன்-லைனிலேயே கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது வரை வோலையாக எடுத்து, அருகில் உள்ள கலந்தாய்வு உதவி மய்யத்தில் செலுத்தலாம்.

துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந் தாய்வு உதவி மய்யத்தில் மட் டுமே அசல் சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும்.

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் கலந்தாய் வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொண்டுவரவேண்டிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை  இணையதளங் களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சந்தேகங்களுக்கு 044 - - 22359901- 20 தொலைபேசி எண்களையும், 18004259779 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner