எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் மருத்துவக் குழுமத்தின் கீழ் இயங்கும் திருச்சி பெரியார் மணியம்மை இலவச மருத்துவ மனையில் துணை செவிலியர் பயிற்சி நிறைவுற்று அம்மாணவர்களுக்கு  16.08.2018 அன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.  2017 - 2018 கல்வியாண்டில் 9 மாணவர்கள் துணை செவிலியர் பயிற்சியை பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனையில் பெற்றனர். அவர்களின் பயிற்சி நிறைவுற்றதை தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் அம்மாணவர்களுக்கு  துணை

செவிலியர் பயிற்சிக்கான சான்றிதழை மருத்துவ அலுவலர் மரு. ப.மஞ்சுளவாணி வழங்கி சிறப்பித்தார். உடன் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவ அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, செவிலியர்கள் இரா. நான்சி, வி. கல்பனா மற்றும் துணை செவிலியர் பயிற்சி மாணவர்கள் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner