எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

திருச்சி, ஆக.18 திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளியில் 44ஆம் ஆண்டு விளையாட்டு விழா அன்னை மணியம்மையார் விளையாட்டு அரங்கில் 16.8.2018 அன்று மதியம் 3.30 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளி தலைமையா சிரியர் பா.சிறீதர்  வரவேற்புரையாற் றினார். தொடர்ந்து, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஒலிம்பிக் சுடர் ஏற்றி விளையாட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் மாணவியர்கள் உடற்பயிற்சி, நடனம், கிராமிய நடனம், தொப்பி, விசிறி, தேசியக் கொடி ஆகிய வற்றை பயன்படுத்தி பல வண்ண உடைகள் அணிந்து திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் 6 ஆம் வகுப்புமாணவியர்கள் ஆரோக்கியம் அளிக்கும் யோகா மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

அணிவகுப்பில் பங்கேற்ற நான்கு இல்லங்களை சேர்ந்த மாணவிகளில் இளஞ்சிவப்பு அணியினர் முதலிடமும், மஞ்சள் அணியினர் இரண்டாமிடமும், சிவப்பு அணியினர் மூன்றாம் இடத் தையும், நீலம்  அணியினர் நான்காம் இடமும் பெற்றனர்.

கபாடிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மஞ்சள் அணி யினரும், நீல  அணியினர் இரண்டாம் இடமும்,   கைப்பந்து போட்டியில் இளஞ்சிவப்பு அணியினர் முதலிடமும், மஞ்சள் அணியினர் இரண்டாம் இடமும் பெற்றனர்.

பாராட்டு மற்றும் பரிசுகள்

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சித்தார்த்தன்- கணபதி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் 12 ஆம் வகுப்பில் வேதியியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கும், 12 ஆம் வகுப்பில் முதல் மற்றும் இரண் டாம் மதிப்பெண் பெறும் நாகம்மை குழந்தைகள் இல்ல மாணவிகளுக்கு முனைவர் தசரதன் - திலகவதி ஆகி யோர்கள் சார்பில் ரொக்கப் பரிசுகளை பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் வனிதா, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பகவள்ளி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியை திலகவதி - முனை வர் தசரதன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

சிறப்பு விருந்தினர்

மேலும்  இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி விமான நிலைய இயக்குநர் கி.குண சேகரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பேசும்போது,

பெரியார் மணியம்மை பள்ளி மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு  மாணவிகளாகிய நீங்கள் தற்போது செய்து காட்டிய பல்வேறு திறமைகள் தான் உதாரணம்.

தந்தை பெரியார் மனித சமுதாய உயர்வுக்கு பாடுபட்டவர் மட்டுமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாடு பட்டவர்.  நான் ஒரு சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் அதுபோன்று மாணவிகளாகி நீங்களும் படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும்.

விமான துறையில் 3 சதவீத பெண்கள் பணியாற்றிய நிலை மாறி இன்றைக்கு  75 சதவீத பெண்கள் பணி யாற்றுகிறார்கள். அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக பெண்கள் இருக் கிறார்கள்.

நிறைவாக பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டு மூன்று பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமையா சிரியர், ஆசிரியர்கள், மற்றும்  பணி யாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக பள்ளியின் முதுகலை வேதியில் ஆசிரியர் ஜெயசித்ரா அனை வருக்கும் நன்றி கூறினார்.

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner