எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 19 தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கடந்த 7-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரை அண்ணா நினை விடம் அருகே இடம் ஒதுக்க தி.மு.க. சார்பில் தமிழக அரசி டம் கேட்கப் பட்டது. ஆனால், சட்ட சிக்கல் காரணமாக கலைஞருக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், மெரி னாவில் இடம் அளிக்க முடி யாது என்றும் தமிழக அரசு திட்ட வட்டமாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் அவ சர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கலைஞருக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அண்ணா நினை விடம் அருகே கலைஞரின் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்தது. அந்த இடத்தில் கலைஞரின் உடல் அரசு மரி யாதையுடன் அடக்கம் செய் யப்பட்டது.

மெரினா கடற்கரை அண்ணா நினை விடம் அருகே கலைஞரை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட தற்கான அரசாணை நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த தகவலை தி.மு.க. வழக் குரைஞர் ஒருவரும் உறுதிப் படுத்தினார்.  இது குறித்து அவர் கூறும்போது, மெரினா கடற்கரை அண்ணா நினைவி டத்தில் கலைஞரை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக அரசாணை வெளியிடப் பட்டு இருக்கிறது. இதை என்னிடம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner