எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, ஆக. 19- இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3ஆ-வது புதிய ஏவு தளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய வல்லுநர் குழு நியமிக்கப்பட் டுள்ளது. அத்துடன் இஸ்ரோவின் லட்சியமாக கருதப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் புதிய ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வுகளையும் இந்த வல்லுநர் குழு மேற்கொள்ளும். இதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 3-ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வாய்ப்புகள் அதிகரித் திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அனைத்து செயற்கைக் கோள்களும் தற்போது ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மய்யத்தில் இருக் கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண் ணில் செலுத்தப்படுகின்றன. 3-ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நீண்டகால கோரிக்கை.

இந்த சூழலில்தான், இஸ்ரோ தலைவராக சிவன் பொறுப்பேற்றதும் இதுகுறித்த ஆலோசனைகள் தீவிரம் அடைந்தன. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

3-ஆவது ஏவுதளம் எங்கு அமைய வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால், புவி யியல், பொருளாதாரம் மற்றும் தேசத் தின் பாதுகாப்பு ரீதியாக அதற்கேற்ற சிறந்த இடம் குலசேகரப் பட்டினம்தான். ஏனென்றால், உலகிலேயே ராக்கெட் ஏவுவதற்கு மிக உகந்த இடம் பூமத்திய ரேகைக்கு 5 டிகிரியில் நெருக்கமான கோணத்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா. அடுத்தபடியாக, சிறீஹரி கோட்டா ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு 13.43 டிகிரியில் இருக் கிறது. ஆனால், குலசேகரப்பட்டி னமோ 8 டிகிரியில் இருக்கிறது.

தவிர, பன்னாட்டு விண்வெளி விதி முறைகளின்படி ஒரு நாடு ஏவும் ராக் கெட் இன்னொரு நாட்டின் பரப்பு மீது பறக்கக் கூடாது. எனவே, சிறீஹரிகோட் டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட் கள் அனைத்தும் இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளின் பரப்பு மீது பறப்பதைத் தவிர்க்க தென்கிழக்கு திசையில் ஏவப்பட்டு, அதன்பிறகு, கிழக்கு நோக்கி திருப்பப்படுகிறது. இத னால் ராக்கெட்டின் பயண தூரம் பல ஆயிரம் கி.மீ. அதிகரித்து, எரிபொருள் செலவும் கூடுதலாகிறது.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப் பட்டாலும், அது வும் இந்த சுற்றுப்பாதையில்தான் செல் லும். இருப்பினும் பாதி வழியில் திசை திருப்ப முடியும் என்பதால் பயண தூரம் பலமடங்கு குறையும்.

பிஎஸ்எல்வி தொலை உணர்வு செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்கள் 4 எரிபொருள் பேக்கேஜ் களை கொண்டிருக்கின்றன.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது, சுற்றுப்பாதையின் தூரம் குறைவதால் ஒரு பேக்கேஜ் எரி பொருள் தேவையில்லை. இதன்மூலம் ராக்கெட்டுடன் கூடுதலாக 600 கிலோ எடை வரை அனுப்பலாம். இதனால், இஸ்ரோவின் வணிகச் செயல்பாடு களைக் கவனிக்கும் ஆன்ட்ரிக்ஸ் நிறு வனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். மேலும் 3ஆவது ஏவுதளம் மூலம் நேரடி யாக 10 ஆயிரம் பேருக்கும், மறைமுக மாக 20 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ராக்கெட்டை தொலை இயக்கியால் (ரிமோட் கன்ட்ரோல்) இயக்கும் டிராக் கிங் மய்யத்தை சேலம் அல்லது ஈரோட் டில் அமைக்க வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேற்கண்ட திட்டத்துடன் இஸ் ரோவின் நீண்டகால லட்சிய மான மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் இங்கிருந்தே செயல் படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிக ரித்துள் ளன. அதன் முதல் பகுதியாக, பூமியில் இருந்து சுமார் 1200 மைல் தொலைவு உயரத்தில் இருக்கும் புவிமய்ய தாழ்வுயரச் சுற்றுப்பாதைக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவும் இந்த நிபுணர் குழு ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன்படி முதல் முயற்சியிலேயே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பாமல், விண் வெளிக்கு முன்னதாக அரைச் சுற்று வரை மனிதர்கள் சென்று திரும்புவார் கள்.

இந்த குழுவின் தலைவராக இஸ் ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மய்ய இயக்குநர் சோமநாத் நியமிக்கப் பட்டுள்ளார். சதீஷ் தவான் விண் வெளி ஆராய்ச்சி மய்ய இயக்குநர் பாண்டியன், உதவி இயக்குநர் மூர்த்தி, இஸ்ரோவின் தலைமை நிலைய இயக் குநர் லலிதாம்பிகா, விஞ்ஞானிகள் அழகுவேலு, அய்யப்பன், உன்னிகிருஷ்ணன் நாயர், கனங்கோ, அனுருப் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner