எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சுந்தரக்கோட்டை, ஆக. 20 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார்.

குளம், வாய்க்கால், ஏரிகள் தூர் வாரும் பணிக்காக ஒதுக்கும் நிதி ஒழுங் காக பயன்படுத்தவில்லை. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவா ரூர், நாகை ஆகிய பகுதிகளில் குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வார இந்த ஆண்டு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விட்டதாகவும், ஏரி குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாகவும், முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவிக்கின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதை கண்டித்து வருகிற 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஆக. 27இல் கோஆப்டெக்ஸ்  ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்

சென்னை, ஆக.20 கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் பாரதி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் 1 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கேரள அரசுக்கு வழங்க  கோ ஆப்டெக்ஸ் நிர்வாகத்தை கேட்டு கொள்ளப்படுகிறது. கோ ஆப்டெக்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1.4.2017 முதல் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் உயர்த்தி குறைந்த பட்ச ஊதிய உயர்வு 5 ஆயிரம் வழங்க வேண்டும்.  1.1.2017 முதல் தமிழக அரசின் அரசாணைப்படி வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி உயர்த்தி வழங்கி நிலுவை தொகையினை ஆகஸ்ட் மாத ஊதியத்தில் வழங்க வேண்டும்.

கடன் விற்பனை தொடர்பாக நிர்வாகம் வகுத்துள்ள விதிகளை மீறி விற்பனை செய்ய சொல்லும் மண்டல மேலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆகஸ்ட் மாதம் 27ஆம்  தேதி காலை 10 மணிக்கு கோ ஆப்டெக்ஸ் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள  காந்தியார் சிலை முன்பாக சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தொடர் பட்டினிப் போராட்டம் இருப்பது என முடிவு செய்யப்பட்டது.  செப்டம்பர் 2ம் தேதி சங்க உறுப்பினர்கள் திருச்சியில் ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner