எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொள்ளிடம், ஆக.20 கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங் குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து திறக் கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பாயும் கொள் ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களை அதிகாரிகள் இரவு, பகலாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வெள்ளமணல், அளக்குடி, முதலைமேடு திட்டு, வாடி, நாதல்படுகை ஆகிய கிராமங்களுக்குள் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த கிராமங்கள் தீவு போல காட்சி அளிக்கின்றன.

கிராமங்களில் உள்ள வீடு களுக்குள் வெள்ளம் புகுந்து விட்டதால் பொதுமக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமங் களை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து அந்த கிராமங்களில் வசித்து வந்த 700 குடும்பங்களை சேர்ந்த வர்கள் 10 பைபர் படகுகள் மூலம் நேற்று வெளியேற்றப் பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner