எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.20 பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடை பெற்ற பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண் ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப் பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவ லகத்துக்கு ஆக.16 மற்றும் ஆக.17 ஆகிய இரண்டு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என கடந்த ஆக.10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை யொட்டி ஆக.17 அன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

எனவே, இந்த சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆக.20-ஆம் தேதி திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப் பிப்பதற்குக் கூடுதலாக கால அவகாசம் வழங் கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner