எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.20 வெள் ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான மருந் துகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழக முதல்வரின் உத்தரவு பேரில், கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளுக்கு தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் ரூ.ஒரு கோடி மதிப் பிலான மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஏற்படக் கூடிய தொற்று நோய்களைத் தடுப்பதற்கும், மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வதற்கும் தேவைப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 30 லட்சம் மாத்திரைகள், ஒரு லட்சம் களிம்புகள், பிற அத் தியாவசிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பான மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 6 லட்சம் கையுறைகள், பாது காப்பான குடிநீர் வழங்குவ தற்காக குளோரின் மாத்தி ரைகள் மற்றும் சலவைத்தூள் ஆகியவை அனுப்பப்பட் டுள்ளன.

மொத்தம் ரூ.ஒரு கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்கள் கோவை மாவட் டத்திலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கும், திருநெல் வேலி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கும் அனுப் பப்பட்டுள்ளன.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல் வேலி, கன்னியாகுமரி ஆகிய கேரள எல்லையோர மாவட் டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான மருத்துவ உத விகள் வழங்குமாறு அந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குநர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner