எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.20  பெண் காவல் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி விசாரிக்க ஏற்கனவே விசாகா என்ற கமிட்டி செயல்பாட்டில் இருந்தது. அந்த கமிட்டியின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால், அது செயல்பாடற்ற நிலையில் இருந்தது. தற்போது அந்த கமிட்டிக்கு புத்துயிர் கொடுத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கூடுதல் காவல்துறை டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அந்த கமிட்டி செயல்படும். கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சிபுரம் சரக டி.அய்.ஜி. தேன்மொழி, ஓய்வுபெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக சீனியர் நிர்வாக அதிகாரி ரமேஷ் உள் ளிட்டோர் இந்த கமிட்டியில் உறுப்பினர்களாக செயல்படு வார்கள் என்று அரசாணையில் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

செயல்பாடற்று கிடந்த இந்த கமிட்டிக்கு தற்போது அரசாணை மூலம் புத்துயிர் கொடுக்கப்பட்டு உள்ளது. காவல் துறை மட்டுமல் லாமல் அரசு துறை அனைத்திலும் வேலை பார்க்கும் பெண் ஊழி யர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து இந்த கமிட்டி விசாரணை நடத்தும். இந்த கமிட்டி கொடுக்கும் விசாரணை அடிப்படையில் அரசு மேல் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

உயர் அதிகாரிகள் இருவரி டையே உள்ள பிரச்சினை குறித்து இந்த கமிட்டி விரைவில் விசா ரணை நடத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner