எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.21 சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத் தால் விநியோகிக்கப்படும் ரூ.1,000-க் கான மாதாந்திர பயண அட்டை மூலம் ரூ.12 கோடி வருவாய் மாதந்தோறும் முன் கூட்டியே கிடைப்பதாக, மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகர் போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:

பேருந்துக் கட்டண உயர் வுக்கு பிறகு சென்னை மாநகர் பேருந்துகளில் பயணிகள் கூட் டம் பெருமளவு குறைந்தது. மேலும் பயணிகளுக்கு வழங்கப் பட்ட பயண அட்டைக்கான கட்டண சலுகையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக விருப்பம்போல் ரூ.50 கொடுத்து நாள் முழுவதும் பயணம் செய் யும் ஒருநாள் பயண அட்டை முறை கைவிடப்பட்டது. இந்தப் பயண அட்டையை ஒருவர் வாங்கி பலர் பயன்படுத்துவதால் போக்குவரத்து கழகத்துக்கு அதிக இழப்பு ஏற்பட்டதாலும், முறை கேடுகள் நடப்பதாக புகார் எழுந்த தாலும் அத்திட்டம் கைவிடப் பட்டது.

இந்நிலையில், மாதாந்திர பயண அட்டை திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர் பேருந்துகளில் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்ய ஏதுவாக ரூ.1,000-க்கு பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இப் பயண அட்டையை மாதந்தோறும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்போது பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் போக்குவரத்து கழகத்துக்கு மாதந்தோறும் சரா சரியாக ரூ.12 கோடி வருவாய் முன்கூட்டியே கிடைத்து விடு கிறது.

ஒரே பேருந்தில் பயணம் செய்ய முடியாத நிலையில், 2 அல்லது 3 பேருந்துகளில் மாறி மாறி பயணம் செய்யக் கூடிய வர்களுக்கு இந்த பயண அட்டை மிகவும் பயனுள்ளதாக இருப் பதால் இதைப் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner