எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.21  தரும புரியை சேர்ந்த இளவரசன்  சந்தேக மரணம்  தொடர்பாக 5 ஆண்டுகள் விசாரணைக்கு பின்பு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு  தலைமை  செய லகத்தில் முதல்வரிடம் நேற்று அறிக்கை தாக்கல்  செய்தார்.

கடந்த 2013 ஜூலை 4ஆம் தேதி தருமபுரியை சேர்ந்த இளவரசன் சந்தேகமான முறையில் ரயில்  தண்டவாளத் தில் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து அவரது தந்தை, இளவரசனின் மரணத் தில்  பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக  தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, அப்போ தைய  முதல்வர் ஜெயலலிதா ஜூலை 8ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதியும் தனியார்  பள்ளிகள் கல்வி கட்டண  நிர்ணய குழு தலைவராக இருந்தவருமான எஸ்.ஆர்.சிங்காரவேலு  தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். ஆணையம் அமைக்கும்போது, 2  மாதங் களுக்குள் விசாரணை மேற் கொண்டு தமிழ் மற்றும் ஆங் கிலத்தில் அறிக்கை  சமர்ப்பிக்க அரசாணை  வெளியிடப் பட் டது.

இதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள  பொதுப் பணி துறை அலுவலகத்தில் இளவரசன் தந்தை திவ்யாவின் குடும்பத்தினர்   மற்றும் விடு தலை சிறுத்தைகள் கட்சி, பாமக கட்சியை சேர்ந்தவர் களிடம் நேரில்  விசாரணை நடத்தினார்.

இரண்டு மாதங்கள் கொடுக் கப்பட்ட  காலக் கெடுவானது  தொடர்ந்து நீடிக்கப்பட்டு 61 மாதங்கள் 24 நாட்கள் நீடிப்பு செய்யப்பட்டு  கடந்த ஜூலை 5, 2018இல் கடைசியாக அரசாணை  வெளியிடப்பட் டது.

இதை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரி இளவரசன் சந்தேக மரணம் தொடர்பான விசாரணை அறிக் கையை சென்னை, தலைமை செயலகத்தில்  முதல்வர் எடப் பாடி பழனிசாமியிடம் ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு நேற்று சமர்ப்பித்தார். அப் போது தலைமை  செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனி ருந்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சிங் காரவேலு, இளவரசன் மரணம் குறித்த அறிக்கையை அரசிடம்  வழங்கினாலும், விசாரணை அறிக்கையில் குறிப்பிட்ட தகவல் எதையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner