எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.21 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது நேற்று ஓய்வு பெற் றார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின்  எண்ணிக்கை 62 ஆக குறைந்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது கடந்த 2016 அக்டோபர் 5 ஆம் தேதி பதவியேற்றார். திரு நெல்வேலி  மாவட்டம், களக் காடு அருகேயுள்ள சிங்கம்பத்து கிராமத்தில் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ம்தேதி பிறந்த அவர், களக்காடு கே.ஏ.எம்.பி.மீரானியா பள்ளியில்  படிப்பை முடித்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல் லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றார். பின்னர் மதுரை சட்டக்கல்லூரியில் சட்ட படிப்பை முடித்து, 1981 இல்  வழக்குரைஞராகப் பதிவு செய்தார்.  கடந்த 1988 இல் சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட இவர், 2016 இல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

சமீபத்தில் தூத்துக்குடி துப் பாக்கி சூடு  வழக்கில் சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட்ட டிவிஷன் பெஞ்சில் பஷீர் அகமது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர், நேற்று ஓய்வு பெற்றார்.  அவருக்கு உயர்நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது.அரசுதலைமைவழக் குரைஞர் விஜய் நாராயண் நீதிபதியை வாழ்த்தி பேசினார். பஷீர் அகமது  ஓய்வு பெற்றதை யடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner