எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,ஆக.21வேலைநிறுத் தம் கடிதம் அளித்த விவகா ரத்தில் போக்குவரத்து தொழிற் சங்கங்களுடன் வரும் 27 ஆம் தேதி 3 ஆம் கட்ட சமரச பேச்சு வார்த்தை  நடக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்கிதமிழகஅரசு கடந்தஜனவரிமாதம்ஒப்பந்தம்  அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலா ளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பின்னர் நீதிமன்றம் நியமித்த நடுவர் தாக்கல் செய்த  அறிக்கையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வே போதுமானது என்று தெரிவித்தார். இதை கேட்டு தொழிலாளர்கள் அதிருப்தி  அடைந்தனர்.

அரசின்கவனத்தைஈர்க் கும் வகையில் மீண்டும் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி நிர்வாகத்திடம் தொழிற்சங்கத்தினர்  கடிதம் அளித்தனர். இதையடுத்து தொழிலாளர் நல ஆணையரகம் சார்பில் கடந்த ஜூன் 14 மற்றும் ஜூலை 12 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சமரச  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்பட வில்லை.

இந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி 3 ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில்  10 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற் கின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner