எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம். ஆக.22 மேனாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு இரங்கல் நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்வி புல முதன்மையர் பேரா பி.கே.சிறீவித்யா அவர்கள் உரையாற்றும்  போது வாஜ்பாய் அவர்கள் பிரதமராக பதவி வகித்த காலத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நெடுஞ்சாலை அமைத்தார் என்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட கார்கில் போரில் வெற்றிப்பெற்றதையும், அவரது அரசியல் ஆதிக்கத்தின் சிறப்பியல்புகளை எடுத்துக்கூறினார்.

கல்வியியல் துறையில் மூன்றாமாண்டு பயிலும் மாணவி ம.சுதாலெட்சுமி உரையாற்றும் போது: வாஜ்பாய் அவர்கள் இந்தியாவின் பத்தாவது பிரதம அமைச்சர் என்றும் மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவர்.

மேலும் சிறு வயது முதலே இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராக இருந்ததால் அவர் ஒரு கவிஞராக உருவெடுத்தார் என்றும் குறிப்பிட்டார்.

பதிவாளர் பேரா சொ.ஆ.தனராஜ் அவர்கள் இரங்கல் உரையில்:  வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் பொஃகரான் அணுசோதனையை வெற்றிகரமாக நடத்தியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும்,  மாநிலங்களவை உறுப்பின ராகவும் பலமுறை பதவி வகித்தவர்.  அவர் சில பிரதமர்களுக்கும், பல முதலமைச்சர்களுக்கும் பல முக்கிய இந்நாள் தலைவர் களுக்கும் எப்பொழுதும் வழிகாட்டும் தலைவராக விளங்கினார்.

மறைந்த   வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகளுக்கு நமிதா பட்டாச்சாரியா அவர்களுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியை படித்து காண்பித்தார்.

இந்நிகழ்வில் முதன்மையர், இயக்குநர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner