எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரம்பலூர், ஆக.22   தமிழகத்தில் வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைபேசி மூலம் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட "104' எனும் இலவச, சுகாதாரத் தகவல் சேவைத் திட்டம் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவர் என்று அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு - தனியார் பங்களிப்புடன் "108' ஆம்புலன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஜி.வி.கே., இ.எம்.ஆர்.அய். நிறுவனத்துடன் இணைந்து செயல் படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, 104 தொலைபேசி மருத்துவ உதவி மற்றும் தகவல் மய்யம் கடந்த 30.12.2013 முதல் செயல்படுத்தப்படு கிறது. 104 என்னும் இலவச தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொண்டால், சென்னையில் உள்ள தலைமைக் கட்டுபாட்டு அறையில் பணியில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மூலமாக சுகாதாரம் சார்ந்த தகவல் அளிக்கப்படும்.

24 மணி நேர அவசர கால சேவைத் திட்டத்தில், குறிப்பாக ஆபத்தான நிலையிலுள்ள நபர்களுக்கும், பேறு கால சிரமங்களை எதிர்க்கொள்ளும் தாய்மார்களுக்கும் உரிய சுகாதார வசதிகள் குறித்து தகவல் அளிக்கப்படும். மேலும், 108 அவசர கால ஊர்தியுடன் இணைப்பு ஏற்படுத்தித் தரப்படும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மய்யங்களில் சுகாதார சேவைகள் வழங் குவதில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய 24 மணி நேரமும் உடனடி உதவி செய்யப்படுகிறது.

அழைப்பாளரின் சேவை அவசியத்துக்கேற்ப, பதிவு அலுவலரால் அழைப்புகள் முறையே -மருத்துவ ஆலோசனை அலுவலர், மனநல ஆலோசகர், சேவை மேம்பாட்டு அலு வலர் மற்றும் மருத்துவ அலுவலர் களுக்கு இணைப்பு கொடுக்கப்படும். மருத்துவ ஆலோசனை அலுவலர் பெறப்பட்ட தகவல்கள், நோயின் அறி குறிகள் அடிப்படையில் உரிய ஆலோ சனை வழங்குவார். மருத்துவ ஆலோ சனை தேவைப்பட்டால், மருத்துவ அதிகாரிக்கு அழைப்பு மாற்றப்படும். பொதுமக்களிடமிருந்து வரும் சுகாதாரத் துறை தொடர்பான அனைத்துப் புகார் களையும், கருத்துகளையும் பதிவு செய்து, உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள், தரைவழித் தொலைபேசி அல்லது செல்லிடப்பேசி மூலமாக, 104 என்னும் எண்ணுக்கு இல வசமாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள், இருமல், காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் களுக்கான சிகிச்சை விவரங்கள், குறிப் பிட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளிக் கும் மருத்துவமனைகள், குறிப்பிட்ட நோய் தொடர்பாக சோதனை செய்யும் மய்யங்கள், எச்.அய்.வி. பாதிப்பு, மது மற்றும் புகைப்பழக்கத்திலிருந்து மீள் வோருக்கான வசதி உள்ளிட்ட சேவை களையும் பெறலாம்.

இதற்கு எந்தக் கட்டணமும் கிடை யாது. இத் திட்டத்தின் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சிகிச்சைக் குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வாகவும் காணப்படுகிறது. தமிழ கத்தைச் சேர்ந்த ஏழை, எளியோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைத்த சிறப்பான திட்டம் இது.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியது: இத்திட்டமானது, அசாம், ராஜஸ் தான், மகாராட்டிரம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் தொடங்கப்பட் டுள்ள இத்திட்டமானது ஏழை, எளிய, கிராமப்புற மக்களுக்கு கிடைத்த நல் வாய்ப்பாகும். ஆனால், பொதுமக்களி டையே சென்றடையாமல் முடங்கி யுள்ளது.

திரையரங்கம், வானொலி, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும். மேலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்க வேண்டும். பேருந்து உள்ளிட்ட வாகனங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இத் திட்டத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள் என்றனர்.

சுகாதாரத் துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, 104 மருத்துவ சேவைத் திட்டம் பொதுமக்களிடையே சென் றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner