எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக. 22-- கேரள மக்க ளுக்கு உதவுவதற்காக தமிழக மக்கள் தினமும் நூற்றுக்கணக்கானோர் தொலை பேசியில் அழைக்கிறார்கள்; உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அள்ளிக் கொடுத்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்கள் என்று கேரள எம்.பி. ராஜேஷ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கேரளம் வரலாறு காணாத மழை- வெள்ளத்தால் புரட்டிப்போடப்பட்டு உள்ளது. மாநிலமே தீவு போல மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் சொந்த வீடு,வாசல், சொத்துக்களை இழந்து, முகாம் களில் அடைக்கலமாகி இருக்கின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி,இதுவரை 370 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், கேரள மக்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங் கானா என பல்வேறு மாநிலங்கள், நிவாரணப் பொருட்களை அனுப்பி ஆதரவுக்கரம் நீட்டிவருகின்றன. நிதியுத வியும் அளித்து வருகின்றன.எனினும், தமிழக மக்கள் தங்களுக்கே நேர்ந்த துயரம்போல, தற்போது வரை பம்பரம் போல சுழன்று நிவாரணப் பொருட் களை சேகரித்து அனுப்பி வருகின்றனர். நேரிலும்சென்று உணவு, குடிநீர், உடை கள், வீட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு, பலசரக்கு என அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

தமிழக மக்களின் பிரதிபலன் பாராத உதவிகள் கேரள மக்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழக மக்க ளுக்கு அவர்கள் தங்களின் நன்றியை பல்வேறு வழிகளில் தெரிவித்து வரு கின்றனர்.

இந்நிலையில்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலை வரும், பாலக்காடு தொகுதி எம்.பி. யுமான ராஜேஷ் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தின் உதவியை பெரிதும் பாராட்டியுள்ளார்.தினமும் தமிழ்நாட்டில் இருந்து நூற் றுக்கணக்கான தொலைபேசி அழைப் புக்கள் வந்து கொண்டே இருக்கின்றன; கேரளத்தில் வெள்ளம் என்று தெரிந்த வுடன், தமிழக மக்கள்தான் அதிகமான அளவில் உதவி செய்ய களமிறங்கி வந்தனர்; தொடர்ந்து எங்கள் பகுதிக்கு அவர்கள்தான் உணவுகளையும், நிவா ரண பொருட்களையும் அனுப்பி வரு கின்றனர்;

தொடர்ந்து உதவி செய்து வருகிறார் கள் என்று நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்களுக்கு எதிராக இங்கே (கேரளத்தில்) சிலர் விஷமத்தனமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்; அவர்கள் எல்லாம் நல்ல நிலையில் (வெள்ளபாதிப்பு இல்லாமல்) இருக் கிறார்கள்; அவர்களுக்கு உதவியே தேவை யில்லை; இங்கு உதவிசெய்பவர்களையும் கூட அவர்கள் அப்படித்தான் கிண்டல் செய்கிறார்கள்; ஆனால், தமிழர்கள் இப்போது செய்யும் உதவியை ஒரு போதும் மறக்க மாட்டோம் என்று நெகிழ்ந்துள்ளார

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner