எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுச்சேரி, ஆக.22  புதுச்சேரி கடற்கரையில் நிழல் இல்லா நாள் குறித்த அரிய வானியல் நிகழ்வை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செவ்வாய்க் கிழமை கண்டு ரசித்தனர்.

தினமும் காலையிலும் மாலையிலும் பொருள்களின் நிழல் மிகவும் நீளமாக இருக் கும். சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல நிழல் சிறிதாகிக் கொண்டே வரும். சூரியன் மேற்கில் நகர ஆரம்பித்ததும் நிழல் மீண்டும் பெரிதாகிக் கொண்டே வரும். ஆனால், எல்லோரும் நினைப்பதைப் போல சூரியன் தினமும் பகல் 12 மணிக்கு வானில் நேர் உச்சிக்கு வருவதில்லை.

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே சூரியன் நம் நேர் உச்சியில் வரும். ஆக ஓரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழலில்லா நாள் என்கிறோம். புதுச்சேரியில் நிழல் இல்லா நாளாக நேற்று அறியப்பட்டது.

இந்த வானியல் நிகழ்வு ஆண்டுக்கு 2 நாள்கள் மட்டுமே இருக்கும் (ஏப்ரல் 21 மற்றும் ஆகஸ்ட் 21,2018) என புதுச்சேரி அறிவியல் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டு பரவலாக புதுவை யில் பல இடங்களில் நிகழ்ச்சி களை நடத்தியது. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக் கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும்.

பல்வேறு பொருள்களின் நிழலின் நீளங்களை உற்று நோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும் மகிழ் வான செயல்பாடாகவும் இருக் கும். எரடோஸ் தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் 2000 ஆண்டு களுக்கு முன்பு இந்த நிழல் இல்லா நாளன்று தான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினார் என  தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதுவையில் இந்த நிகழ்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காணும் வகையில் புதுவை அறிவியல் இயக்கம் மிக விரிவான அளவில் புதுச் சேரி கடற்கரை, மேட்டுப்பா ளையம் அரசு உயர் நிலைப் பள்ளி, காட்டேரிக்குப்பம் இந் திரா காந்தி அரசு உயர் நிலைப் பள்ளி, புனித லூயிஸ் டி கொன்சாக் உயர் நிலைப்பள்ளி, சத்தியா சிறப்புப் பள்ளி, உத விக்கரங்கள், துளி இல்லங்கள் உள்பட பல பள்ளிகளில் நேரடி செயல் விளக்கம் மூலம் மாணவர்கள், பொதுமக்கள் கண்டு வியந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner