எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிதம்பரம், ஆக.23 மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாள்களாக 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. திங்கள்கிழமை இந்த நீரின் அளவு ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்த நீர் கல்லணைக்கு வந்து, அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப் பட்டது.

புதன்கிழமை நிலவரப்படி, கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி நீர் வருகிறது. அந்த நீர் கொள் ளிடம் ஆற்றில் வெளியேற்றப் படுகிறது.

கீழணையிலிருந்து வடக்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீரும், வடவாற்றில் விநாடிக்கு 2,048 கன அடி தண்ணீரும் வெளியேற்றப் படுகிறது. வடவாறு பாசன வாய்க்கால்களுக்குத் திறந்தது போக விநாடிக்கு 1,524 கன அடி வீதம் வீராணம் ஏரிக்குச் செல் கிறது.

ஏரியில் இருந்து சேத் தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக 1,100 கன அடி நீர் பாசனத்துக்காகவும், 74 கன அடி நீர் சென்னை குடிநீர் வாரி யத்துக்கும் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது.

தற்போது, கொள்ளிடம் ஆற் றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்து வருவதால், கடைமடைப் பகுதி கிராமங் களான திட்டுக்காட்டூர், கீழ குண்டபாடி, அக்கரை ஜெயங் கொண்டப்பட்டினம், பெராம் பட்டு, சின்னகாரமேடு, அகர நல்லூர், பழைய நல்லூர், வீரன் கோவில்திட்டு, கண்டியாமேடு உள்ளிட்ட கிராமங்களில் புகுந்த வெள்ளம் வடியத் தொடங்கி யுள்ளது.

இந்தக் கிராமங்களில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப் பட்டு, கரையோரப் பகுதியில் தங்கவைக்கப்பட்டு, அவர் களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner