எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பென்னாகரம், ஆக.23 கருநாடக, கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும் தற் போது விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர், தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ராஜ் நகர், கேரளாவின் வயநாடு, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளதால் கரு நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால், கருநாடக அணை களிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவுகள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகின்றன.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1. 20 லட்சம் கனஅடியாக தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண் டிருந்தது.

பின்னர், புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி தண்ணீரின் அளவு படிப்படியாகக் குறைந்து தற்போது விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது.

நீர்வரத்து குறைந்துள்ளதால் வெள்ளப் பெருக்கின்போது மூழ்கிய பிரதான அருவி, சினி அருவி, அய்வர் பாணி ஆகிய அருவிகள் தற்போது வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய் யவும் 12-ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கருநாடக அணைகளிலிருந்து வரும் நீரின் அளவை, மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner