எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.23 கைத்தறி ஆடைகள், தரைவிரிப்புகள் உள் ளிட்டவை தயாரிக்க கரூர் ஏ.டி.டி. சாரல் நிறுவனம் சார்பில், சென்னையில் இலவசப் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது.

கரூர் ஏ.டி.டி. சாரல் நிறுவனம் சார்பில் கைத்தறித் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக கைத்தறி ஆடைகள், தரைவிரிப்புகள் உள்ளிட்டவை தயாரிக்க சிறு, குறு, நடுத்தர கைத்தறி நிறுவனங்கள், பொது மக்கள் ஆகியோருக்கு இலவசப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

விழாவில் இந்த நிறு வனத் தின் நிர்வாக இயக்குநர் செந்தில் பேசியது:

கைத்தறி ஆடைகள், தரைவிரிப்புகள், ஜன்னல் அலங்காரத் துணிகள் உள்ளிட்டவை தயாரிக்க சிறு, நடுத்தர கைத்தறி நிறு வனங்கள், பொதுமக்கள் ஆகி யோருக்கு இலவசப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

பயிற்சிக்குப் பிறகு கைத்தறி இயந்திரங்கள் வாங்க மானியத் துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற தேவையான உதவிகள் செய்யப்படும்.

பயிற்சி முகாம் உள்ளிட்ட விவரங்களை 99449-90351 என்ற செல்லிடப்பேசி எண்ணில் பெற லாம் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner