எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி,  ஆக.23 திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் புதன்கிழமை இரவு 8 மதகுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பாலம் உடைந்தது. கொள்ளிடத்தில் நீர் வீணாக செல்கிறது.

காவிரியில் முக்கொம்பு என்பது காவிரி, கொள்ளிடம் பிரிந்து பாயும் முக்கியப் பகுதியாகும். முக்கொம்பு மேலணையின் தெற்குப் பிரிவு கடந்த 1836-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சுமார் 2.70 லட்சம் கன அடி நீர் செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த மேலணையில் 45 மதகுகள், தூண்கள் உள்ளன.

இதில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு மேல் திடீரென 6-லிருந்து 13 வரையிலான 8 மதகுகள் அதனோடு சேர்ந்த தூண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அனைத் துத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறி யாளர் செந்தி ல்குமார், திருச்சி சரக டிஅய்ஜி ஆர்.லலிதா லட்சுமி உள்ளிட்டோர்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காவிரி, கொள்ளிடத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். தண்ணீர் குறைந்த நிலையில் உடைந்துள்ளதால் எந்தவித அபாயமும் ஏற்படவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner