எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஆக. 24 -காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் முக்கொம்பு அணையில் இருந்து காவிரி ஆற்றில்பாசனத்திற்கு திறக்கப் பட்ட தண்ணீர் போக உபரி நீர் முழுவதும் கொள்ளிடம் அணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும். 5 ஆண்டு களாக டெல்டா பாசனத்திற்கே பற்றாக்குறையாக தான் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதனால் கொள்ளிடம் அணைக்கட்டில் தண்ணீர்திறக்கப் படாமல் அதில் உள்ள 45 மதகுகளும் முறையாக பராமரிக் கப்படாமல் இருந்தன. இந்நிலை யில் கறுநாடகாவில் பெய்த கன மழையால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணையில் இருந்து 2.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அந்த தண்ணீர் முழுவதும் முக்கொம்புஅணைக்கு வந்து அங்கிருந்து காவிரிஆற்றில் 65 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 1.75லட்சம் கன அடியும் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் கடந்த ஆக.19 ஆம் தேதி திருச்சி கொள்ளிடம்பழைய பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது. புதன் கிழமை 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு இருந்தது. ஏற் கெனவே பழுதாகி இருந்த மதகுகளில் அடுத்தடுத்து 7 மதகுகள் இடிந்து புதன் இரவு தண்ணீரில் மூழ்கின. வெள்ளத் தின் வேகத்தால் இரவு 10 மணிக்கு அடுத்தடுத்த மேலும் 2 மதகுகளும் இடிந்துவிழுந்தன. 9 மதகுகளின் அடிப்பகுதிகள் உடைந்து ஆற்றில் மூழ்கி உள் ளன.இதனால் அணையில் தேங்கி இருந்ததண்ணீர் முழு வதும் ஆற்றில் வெளியேறி வரு கிறது. வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதால் மேலும் மதகுகள் உடைந்து ஆற்றில் மூழ்கும் அபாயம் உள்ளது.இதையடுத்து கொள்ளிடம் கரையோரமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள் ளது. இந்நிலையில் மதகுகள் உடைப்பு பற்றி பொதுபணித்துறை முதன் மை செயலாளர் பிராபகர் முக்கொம்பு மேலணை பகுதியில் நேரில் ஆய்வுசெய்தார்.

பின்னர் அவர் கூறுகையில்,மதகுகள் உடைப்பால் எந்த ஆபத்தும்இல்லை என்றார்.9 மதகுகள் இடிந்து விழுந்த தகவல் தெரிந்தவுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு மேற் கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர் களிடம் கூறிய தாவது:

முக்கொம்பு பகுதியில் கொள் ளிடத்திற்கு தண்ணீர் திறந்து விட 45 மதகுகளும் காவிரிக்கு தண்ணீர் திறந்து விட 49 மதகுகளும் உள்ளன. சமீபத்தில் கூடுதல் தண் ணீர் கொள்ளிடத்திற்கு திறந்து விடப்பட்டதால் மதகுகள் சேதமடைந்து இடிந்துள்ளன. இதையடுத்து 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பகுதியை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.

பருவமழை வந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் ராட்சத இயந்திரங்கள் வரவழைக் கப்பட்டு 12 மீட்டர் நீளம் 110 மீட்டர் அகலமுடைய தற்காலிக தடுப்புத் தூண்கள் அமைக்கப்பட உள்ளன.  பெரிய இரும்பு தூண் கள், கான்கிரீட் தூண்கள், பனை சவுக்கு மரங்கள், மணல் மூட் டைகள் கொண்டு இத்தடுப்பு தூண்கள் கட்டப்பட உள்ளன. 45 மதகுகளையும் ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதை யடுத்து புதிய நிரந்தர பாலம் கட்டுவது குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப் பப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் புதிய நிரந்தர மதகு பாலம் கட்டப்படும் என்றார். திருச்சி முக்கொம்பு அணையும், கொள்ளிடம் அணை யும் கரூர் பைபாஸ் சாலை  சேலம் பிரதான சாலை ஆகிய வற்றின் இணைப்பு பகுதியாக இருந்தன.

அணைகளில் கட்டப் பட்டி ருந்த பாலம் இலகு ரக வாகனங் களின் போக்கு வரத்திற்கு திறந்து விடப்பட்டிருந்தது. 2 சாலைகளில் உள்ள குணசீலம், வாத்தலை உள்பட 10த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை பயன் படுத்தி வந்தனர். புதன் கிழமை இரவு கொள்ளிடம் அணை பாலம் உடைந்ததால் கிராமங் களுக்கு இடையேயான போக்கு வரத்து துண்டிக்கப்பட் டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner