எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடனடியாக கையகப்படுத்தவேண்டும் தமிழக அரசு

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஆக. 24 தஞ்சாவூர் -வல்லம் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆக்கிரமித் துள்ள சுமார் 58.17 ஏக்கர் அரசு புறம் போக்கு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன் றாவது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தஞ்சாவூர் வல்லத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகம், அரசுக்குச் சொந்தமான 58.17 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக் கிரமித் துள்ளதாக குற்றச்சாட்டு எழுந் தது. இதையடுத்து அந்த நிலத்தை கைய கப்படுத்த அரசு முயன்றது. இதை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக் கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி, உரிய இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டு அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துக்கே வழங் கலாம்'' என தீர்ப்பளித்தார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதி களில் ஒருவரான நூட்டி ராமமோகனராவ், சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆக்கிர மித்துள்ள நிலத்துக்கு ஈடாக ரூ.10 கோடி யைப் பெற்றுக்கொண்டு அந்த நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்கலாம்'' என தீர்ப்பளித்தார். ஆனால், மற்றொரு நீதி பதியான எஸ்.எம்.சுப்பிரமணியம், பல கோடி பெறுமானமுள்ள அரசு சொத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களிடமே திருப்பி ஒப்படைப்பது என்பது தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே, அந்த சொத்தை வேலி போட்டு பாது காப்பதுடன் மீட்பதற்கான நடவடிக்கை களை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்'' என உத்தரவிட்டு இருந்தார்.

இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப் பினைப் பிறப்பித்ததால் இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆக்கிரமித்து வைத் துள்ள அரசு நிலத்தை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்தவேண்டும்'' என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner