எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

விவகாரத்து பெற்ற பின்னரும், முன்னாள் கணவரால் சித்ரவதைக்கு ஆளாகும்போது, அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பெண் புகார் அளிக்கலாம் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்ப திக்கு கடந்த 2012ஆம் ஆண்டு விவாக ரத்து வழங்கப்பட்டது. எனினும், அப் பெண்ணின் முன்னாள் கணவர், அவ ருக்கு தொடர்ந்து பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து, தனது முன்னாள் கணவன் மீது குடும்ப வன்முறை தடுப் புச் சட்டத்தின் கீழ் அப்பெண் புகார் அளித்தார். இதனை எதிர்த்து அந்த நபர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், விவாகரத்து பெற்ற பின்னர் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் அளிக்கமுடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ராஜஸ் தான் உயர் நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், விவாகரத்துக்கு பின்னரும்,

முன்னாள் கணவரால் கொடுமை களுக்கு உள்ளாகும் பெண், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் செய்ய சட்டப்படி உரிமை உள்ளது. அவ்வாறு புகார் அளித்த பெண்ணுக்கு, அச்சட்டத் தின்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், இவ் வழக்குதொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப் பையே உறுதி செய்து உத்தரவிட்டு உள்ளது.

- நன்றி: ‘சட்டக்கதிர்’, ஜூலை 2018

தகவல்: ந.நல்லசிவன், திருநெல்வேலி

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner