எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.25 தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை டி.ஜி.பி. தே.க.ரா ஜேந்திரன் பிறப்பித்துள்ளார். தலைக்கவசம் அணியாவிட்டால் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட் டுள்ளார்.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் கட்டாய தலைக்கவசம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக் குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், "இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட் டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசா ணையை ஏன் தீவிரமாக அமல்படுத்தவில்லை? அரசாணையை மட்டும் பிறப்பித்து விட்டு அரசு அமைதியாக இருக்கக் கூடாது" என கருத்துத் தெரிவித்தனர். மேலும், இது குறித்து தமிழக உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. மற்றும் போக்குவரத்து துறைச் செயலாளர் ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

டி.ஜி.பி. நடவடிக்கை: உயர் நீதிமன்றத் தின் இந்த உத்தரவின் காரணமாக, தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன், அனைத்து மாநக ரக் காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக டி.அய். ஜி.க்கள், மண்டல அய்.ஜி.க்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவு ஒன்றை பிறப் பித்துள்ளார்.

தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து செல்கிறவர்கள் மீதும் கட்டாயம் வழக்குப் பதிய வேண்டும், ஒவ்வொரு நாளும் இது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டன என்பதை டி.ஜி.பி. அலுவலக தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் இரு சக்கர வாகனத்தில் பின் இருக் கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண் டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்துமாறு டி.ஜி.பி. அறிவுறுத்தி யுள்ளார். இந்த உத்தரவின் விளைவாக, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இரு சக்கர வாகன பின் இருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது வெள்ளிக் கிழமை முதல் வழக்குப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner