எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி,  ஆக.25 முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த பகுதியைச் சீரமைக்க ரூ. 95 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

கடந்த இரு மாதங்களாக கொள்ளிடத்தில் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்ட அதிகப்படியான உபரிநீரின் அழுத்தத் தால் முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் மேலணையில் கடந்த புதன் கிழமை மதகுகள் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலணையின் 45 மதகுகளில் 6 முதல் 14ஆவது மதகு வரை மொத்தம் 9 மதகுகள் சேதமடைந்துள்ளன. இதில், தற்காலிக தடுப்புப் பணியானது 3-ஆவது மதகுப் பகுதியிலிருந்து தொடங்கி 16-ஆவது மதகில் நிறைவு பெறும் வகை சீரமைக்கப்படுகிறது. இதற்காக 3ஆவது மதகுப்பகுதியில் மணல் மூட்டை அடுக்கும் பணி வெள்ளிக்கிழமை முழுவீச்சில் நடைபெற்றது. இங்கிருந்து யூ வடிவில் 16-ஆவது மதகு வரையிலும் தடுப்பு அமைக்கப்படுகிறது. இந்தப் பணியில் நவீன இயந்திரங்களுடன், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிக்காக மட்டும் முதல் கட்டமாக ரூ.95 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையெனில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகளைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நான்கு முதல் 7 நாள்களுக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner