எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.25- நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறப் பட்ட புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள் ளது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத் தில் திமுக அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்தமனுவில், கடந்த 2011-ஆம்ஆண்டு முதல் 2016-ஆம்ஆண்டு வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகித்தபோது, நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினர் களான பி.சுப்பிரமணியம், சந்திரகாந்த் ராமலிங்கம், எஸ்.பி.கே. நாகராஜன், செய் யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோருக்கு வழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக அவரின் நெருங் கிய உறவினர்களான ராம லிங்கம் உள்ளிட்டோருக்கு பல கோடி மதிப்பிலான ஒப்பந் தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊழலில் தொடர்பு டையவர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மே மாதம் ஊழல் தடுப்புப்பிரிவுக்கு புகார் அனுப் பியும் இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

எனவே, எனது புகாரின் மீது லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலை யில் வெள்ளியன்று விசார ணைக்கு வந்தது.அப்போது, நெடுஞ்சாலைத்துறை டெண்ட ரில் மோசடி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். முதல்வர் மீதான புகாருக்கு எடுக்கப்பட்ட நட வடிக்கை குறித்து நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, ஜூன் 22 ஆம் தேதியே விசாரணை தொடங்கியதாக லஞ்சஒழிப்புத் துறை பதிலளித்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மீதான புகார் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner