எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக அரசின் செயலாளர்கள் நேரில் விளக்கமளிக்க வேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஆக.25 குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்தநடவடிக்கைகள் குறித்து தமிழக உள்துறைமற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்க மளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில்குழந்தைக் கடத்தலை தடுக்க தனி படையை உருவாக்கவும், அறிக்கை தாக்கல்செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதுகுறித்த விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பிரச்சினையின் முக்கியத்துவத்தை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை. நீதிமன்றம்அழுத்தம் கொடுத்துத்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. அரசே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலமான குழந்தைகள் கடத்தப்படுவதை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக நீதிபதிகள் கூறினர். அப்போது தமிழக குழந்தைகள் குஜராத் மாநிலத்திற்கு கடத்தப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குழந்தைகள் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் நோக்கம்குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல் துறையினர் மற்றும் நீதிபதிகளின் குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால்மட்டும் போதாது. கடைசி குடிமகனின் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து உள்துறை செயலாளர் மற்றும் சமூக நலத்துறைமுதன்மை செயலாளர் நேரில் ஆஜராகிவிளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன்

பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம், ஆக.25 கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. அத்துடன் மாநிலத்தின் பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டதால் 14 மாவட்டங் களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

அங்கு தற்போது மழை நின்று விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் வெள்ளம், சேறு, சகதியால் மாசுபடிந்த வீடுகள் தூய்மைப் படுத்தப்பட்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் இந்த பணிகளையும், மழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களையும் முதல் அமைச்சர் பினராயி விஜயன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு மற்றும் துப்புரவு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன்மூலம் 60,593 வீடுகள் மற்றும் 37,626 கிணறுகள் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 துணைமின் நிலையங்களில் 41 நிலையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

வியாழக்கிழமை நிலவரப்படி 2,774 முகாம்களில் 10,40,688 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்கள் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டு உள்ளன. எனவே ஓணம் விடுமுறையை தொடர்ந்து அவர்கள் அனைவரும் வேறு அரங்குகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர்.

இந்த முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் கிடைப்பதாக அவர்கள் திருப்தி வெளியிட்டு உள்ளனர். வெள்ளத்தால் சேதமடைந்துள்ள தங்கள் வீடுகளை குறித்தே அவர்கள் கவலைப்படுகின்றனர். அவை அனைத்தும் சரி செய்யப்படும்.

மழை வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளின் சீரமைப்பு பணிகளுக்காக, பெண்களை தலைவராக கொண்ட குடும்பங் களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதற்கான வட்டியை அரசே செலுத்தும். மேலும் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கியை பை வழங்கப்படும்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner