எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,ஆக.25 மாணவர் களின் எண்ணிக்கை 250 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சிறீசாந்தி விஜயா உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி மற்றும் ஓவிய ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுப்பு தெரிவித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இதனையடுத்து அந்தப் பள்ளியின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு கடந்த 1997ஆம் ஆண்டு பிறப் பித்துள்ள அரசாணைப்படி, மாணவர்களின் எண்ணிக்கை 250 -க்கும் அதிகமாக உள்ள பள்ளிகளில் மட்டுமே உடற் கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் உத்தரவு: இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மாண வர்களின் உடல் நலன் ஆரோக் கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்கு யோகா உள்ளிட்ட உடற்கல்வி பயிற்சிகளை மாண வர்களுக்கு கட்டாயமாக பயிற்று விக்க வேண்டும்.

எனவே, மாணவர்களின் எண்ணிக்கை 250 -க்கும் குறை வாக உள்ள பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை மதிப்பூதியத்தின் அடிப்படை யில் தமிழக அரசு பணியமர்த்த வேண்டும்‘ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner