எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராசிபுரம், ஆக.26 சந்திராயன் 2 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

ராசிபுரம் அருகே தனியார் கல்வி நிறுவனத்தின் பட்டம ளிப்பு விழாவில் நேற்று (25.8.2018) பங்கேற்ற அவர், செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கடந்த காலங்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை செயற் கைக்கோள் அனுப்பப்பட்ட காலம் மாறி, 2 மாதங்களுக்கு மூன்று செயற்கைக்கோள் தயாரிக் கும் அளவுக்கு இந்தியா முன் னேற்றம் கண்டுள்ளது.

கடந்த காலங்களை ஒப்பிடு கையில், அதன் திறனும் செயல் பாடுகளும் பத்து மடங்கு அதி கரித்துள்ளன.

இதுவரை செயற்கைக்கோள் தயாரிக்காத பிற நாடுகளும் செயற்கைக்கோள் தயாரிக்கும் வகையில், ஆண்டுக்கு 15 நாடு களுக்குப் பயிற்சியளிக்கும் திட் டம் அய்.நா.விடம் வழங் கப்பட்டுள்ளது.

முன்னேறிவரும் நாடுகளும் இதனால் பயன்பெறும். மாண வர்கள், கல்வி நிறுவனங்களுக்கும் பயிற்சிகள் வழங்க இஸ்ரோ தயாராக உள்ளது.

பொதுவாக, சர்வதேச ஆராய்ச்சி மய்யம் அமைப்பதற்கு சந்திரன் ஏற்ற இடம். இதை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொண் டுள்ளன. எனவே, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கூட்டாகச் சேர்ந்து நிலவில் ஆராய்ச்சி மய்யம் அமைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். தனி ஒரு நாடு இதனைச் செய்வது கடினம்.

அரசு தனியாருடன் இணைந்து செயற்கைக்கோள் தயாரிப்பதன் மூலம் ஆண்டுக்கு 50 செயற்கைக்கோள்கள் உருவாக் குவது சாத்தியமே. விண் வெளியில் ஏற்பட்டுள்ள செயற் கைக் கோள் மாசை அகற்ற சர்வதேச நாடுகள் இணைந்து, அவரவர்கள் அனுப்பி, தற்போது பயனின்றி உள்ள செயற்கைக் கோள்களை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.

நிலவில் நீர் உள்ளது என 2009-இல் நாம் கண்டுபிடித்தோம். இதைத் தற்போது பிற நாடுகளும் ஏற்றுள்ளன. நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளதால், அங்கு ஆக்சிஜன் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போது சந்திராயன் -2 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே செலுத்தப் பட வேண்டிய அந்தக் கோள், மேலும் சில பரிசோதனை களுக்காக சற்று தள்ளி வைக்கப் பட்டுள்ளது என்றார் அவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner