எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஆக.26 திருச்சி முக்கொம்பு மேலணை கொள் ளிடம் பாலத்தில் உடைப்பு ஏற் பட்ட பகுதியில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி தீவிர மாக மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

திருச்சி முக்கொம்பு மேல ணையில் 9 மதகுகள் மற்றும் பாலம் கடந்த 22 ஆம் தேதி இரவு இடிந்து விழுந்தன.

இதையடுத்து உடைந்த பாலத்தில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் பொதுப் பணித் துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் பக்த வத்சலம் தலைமையில், சிறப்புத் தலைமைப் பொறியாளர் (திருச்சி மண்டலம்) ரவிச்சந்திரன், செயற் பொறியாளர்கள் சண்முகவடி வேல், கே.கே.கணேசன் உள் ளிட்ட அலுவலர்கள் மேற்பார் வையில் நடைபெற்று வருகின் றன.  பாலம் உடைந்த பகுதிக்கு மேற்குப் பகுதியில் 1 முதல் 19 ஆம் எண் கொண்ட மதகுகள் வரை 200 மீட்டர் உயரத்துக்கும், 10 அடி அகலத்துக்கும் மணல் மூட்டைகள் அடுக்கும் பணியை தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியை இன்னும் 4 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே பகுதியில் தொழிலா ளர்கள் மணல் மூட்டையை அடுக்கினால் காலதாமதம் ஏற்படும் என்பதால், அணையின் கிழக்குப் பகுதி வழியாகவும் பாதை அமைக்கப்பட்டு அதன் வழியாக மணல் மூட்டை கொண்டு செல்லப்பட்டு, அடுக் கப்படுகின்றன.

மூன்றாம் எண் மதகுகளுக்குப் பிறகு பாலத்தின் ஆழம் அதிகம் என்பதால் தொழிலாளர்கள் செல் வதற்கு பயன்படுத்த தீயணைப்புத் துறையினரின் பைபர் படகும் பயன்படுத்தப்பட உள்ளது.

மணல் மூட்டை அடுக்கும் பகுதியாக சரியாக இருக்கும் வகையில் கயிறு கட்டப்பட்டு அதன் எல்லைக்குள்பட்டவாறு மணல் மூட்டைகள் அடுக்கப்படு கின்றன. கழுத்தளவு தண்ணீ ருக்குள் நின்றவாறு தொழிலா ளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர். இப்பணி முடிந்த பின்னர் தற்காலிக தடுப்பு அமைக்கப்பட உள்ளது.

மணல் மூட்டைகளை அடுக் கிய பின்னர் தண்ணீர் வருவது நிறுத்தப்பட்ட பின்னர், பாலம் உடைந்த பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு அதிகளவிற்கு சவுக்குக் கட்டைகள் நடப்பட்டு, அதன் பின்னர் மற்றப் பணிகள் தொடங்கும்.

தொழிலாளர்களின் எண் ணிக்கையை அதிகப்படுத்தி யாவது பணியை விரைவுப் படுத்தக் கூறியிருக்கிறோம் என் கின்றனர் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner