எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஆக.26 திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேனி லைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விளை யாட்டு விழா மழலையர் முதல் அய்ந் தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவர்களிடையே 24.8.2018 அன்று காலை 7.30 மணியளவில் பள்ளியில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் பெரியார் கல்விக் குழுமங்களின் தலைவர் வீ.அன்புராஜ் தலைமையில், கல்விவளாக ஒருங்கிணைப்பாளர் ஆர்.தங்கத்தாள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இவ்விழாவில் கி.ஆ.பெ. அரசு மருத் துவக் கல்லூரி, சமூக மருத்துவத் துறை பேராசிரியர் ஆர்.கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  தேசி யக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் வனிதா அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.

இதைத் தொடர்ந்து மழலையர்களின் உடற்பயிற்சிகள், பல்வேறு விளை யாட்டு போட்டிகள், கண் கவரும் நடனம், யோகா பயிற்சிகள் உள்ளிட்ட பன்முக திறமைகளை வெளிப்படுத் தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்த ஆர்.கீதா பேசுகையில், படிப்பில் மட் டுமல்லாமல், விளையாட்டியிலும் சிறந்து விளங்கியதால் தான் நான் மருத்துவத்துறைக்கு வர முடிந் தது. விளையாட்டு படிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். மாணவர் களின் மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சியை ஊட்டும்.

விளையாட்டு வாழ்க்கையின் ஓர் அங்கம். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாண வர்களை விளையாட அனுமதிக்க வேண் டும். இதனால் விளையாட்டு மாணவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும். மேலும் விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாண வர்களது  பெயர்களை தனி அறிவிப்பு பலகை வைத்து ஊக்கப்படுத்த வேண்டு மென்றார்.

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் நான்கு விளையாட்டுக் குழுக் களாக பிரித்து நடத்தப்பட்ட உடற்பயிற்சி யில் முதலிடம் பெற்ற நீல அணிக்கும், சிவப்பு அணிக்கும் கோப்பை வழங்கப் பட்டது. 2 ஆம் இடம் பெற்ற மஞ்சள் அணிக்கும், 3 ஆம் இடம் பெற்ற பச்சை அணிக்கும் கோப்பை வழங்கப்பட்டது. பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் அனைத்திலும் வெற்றி பெற்ற பச்சை அணிக்கு ஒட்டுமொத்த சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

விழா நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியைகள் திருவேணிலதா, பிலோமினா பென்னி, ஆசிரியர் அந்துவான் ஆகி யோர் தொகுத்து வழங்கினர்.

இவ்விழாவில் பெரியார் கல்வி நிறு வனங்களின் முதல்வர்கள், தலைமையா சிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாண விகள் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் அனை வருக்கும் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner