எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.27 ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் கடந்த நூறாண்டு காலத்தில் ஏற்படாத இயற்கை பேரிடராக நேர்ந்த பேரழிவு போன்ற வெள்ளப் பெருக்கால் அம்மாநிலமே தண்ணீரில் தத்தளிக் கிறது. கேரள மாநில முதல்-வர் பினராயி விஜயன் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, அவர்கள் வேண்டுகிற நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கேரள மாநில அரசுக்கு ம.தி.மு.க. ரூ.10 லட்சம் ரூபாய் நிதி வழங்குகிறது. மேலும், தேவை யான நிவாரணப் பொருட்களையும் சேகரித்து அனுப்புகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பு

மேட்டூர், ஆக. 27 கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் குடகு, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன.

இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முன்தினம் நொடிக்கு 21 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று காலை நொடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதேபோல கபினி அணையில் இருந்து நொடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் நொடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நொடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக வந்தது. நேற்று நொடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நொடிக்கு 20 ஆயிரத்து 742 கனஅடி வந்து கொண்டு இருந்த நீர்வரத்து, நேற்று காலை நொடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிக ரித்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் நொடிக்கு 25 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து நீர் மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக நொடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக நொடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 16 கண் பாலம் வழியாக 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மிகைநீர் வெளியேறு வதைப் பார்த்து ரசித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner