எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.27  சேலம் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. கடந்த 2016ஆ-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி சேலத்தில் இருந்து ரயில் மூலம் சேலம் அய்.ஓ.பி வங்கி உட்பட பல வங்கிகள் பழைய ரூபாய் நோட்டுகளை சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயில் மூலம் அனுப் பின. சேலத்திலிருந்து வந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தவுடன் பார்த்த போது பணப்பெட்டி திறந்து கிடந்தது. இதனையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் ஆய்வு:

சேலத்திலிருந்து சென்னைக்கு வங்கி பணம் எடுத்து வரப்பட்ட ரயில் பெட்டியின் மேற்புரத்திலிருந்தே, கொள்ளையர்கள் துளை போட்டுள்ளதாக தடயவி யல் அதிகாரிகள் உறுதி செய் துள்ளனர். இரண்டு அடி அக லத்திற்கு ரயில் பெட்டியின் மேற்கூரையில் போடப்பட்டுள்ள துளையை அங்குலம் அங்குல மாக ஆராய்ந்த பின்னர் அதி காரிகள் தெரிவித்தனர். பணம் எடுத்து வரப்பட்ட ரயில் பெட் டியின் இரும்பு மேற்கூரையில் 15 வெட்டுகள் வெட்டப்பட் டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓடும் ரயிலில் ரூ.342 கோடியில், ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது என்றும் 4 பேரின் கைரேகைகள் சிக்கியுள்ளதாகவும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். ரயில் பெட்டியை தடயவியல்துறை துணை இயக்குநர் ஜமுனா சிவசங்கரன் 45 நிமிடங்கள் ஆய்வு செய்தார். கொள்ளை குறித்து பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச கொள்ளை கும்பல் கைவரிசை

கொள்ளை குறித்து பல்வேறு கோணங்களில் தமிழக சிபிசிஅய்டி காவல்துறையினர் விசா ரணை நடத்தி வந்தனர். இதனை யடுத்து கொள்ளை குறித்து 2 ஆண்டுக்கு பின் செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலங்கி யுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கை வரிசை காட்டியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 4 மற்றும் 5 பேர் கொண்ட கும்பல் ரயில் கொள் ளையில் ஈடுபட்டுள்ளனர் என் றும், கொள்ளை கும்பல் ஏற் கெனவே வடமாநிலத்தில் கை வரிசை காட்டியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள் ளையர்களை பிடிக்க சிபிசிஅய்டி காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner