எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 27- பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் கோட்டை நோக்கி பேரணியாக செல்கின்றனர். அவர்கள், முதல் வரை சந்தித்து மனு அளிக்கின்றனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் 16 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணி யாளர்களை கடந்த 2002இல் பணி நீக்கம் செய்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை பணியா ளர்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தினர் மேலும், சாலை பணியாளர் களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது சட்டத்திற்கு புறம் பானது என்று தீர்ப்பளித்தது. ஆனாலும், தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதை எதிர்த்து சாலைப் பணியா ளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கை தமிழக அரசு திரும் பப் பெற்றது.  இந்த நிலையில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்கால மாக அறிவித்திட வேண்டும்.

இறந்த சாலைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங் கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தற்போது வரை போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் தற்போதுவரை அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மாநில சாலைகளின் பராமரிப்பு அனைத்து தனியார் ஒப்பந் தகாரர்களிடம் தமிழக அரசு கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, 10 ஆயி ரம் சாலைப் பணியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சாலை பணியாளர்கள் பணியிடங்களை குறைக்க கூடாது, 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ஆம் தேதி 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் பேரணியாக சென்று முதல்வரிடம் மனு அளிக்க  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியா ளர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முக ராஜா கூறும் போது, 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட சாலைப் பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்பி படித்த இளை ஞர்களுக்கு அரசு துறையில் வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 7ஆம் தேதி தலைமை செயலகம் நோக்கி சாலை பணியாளர்கள் பேரணியாக சென்று முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.

இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்கின்றனர். கேரளாவிற்கு உத விடும் பொருட்டு 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை தருகின்றனர் என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner