எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக.28 பெரியார், அண்ணா வழியில் கலைஞர் மேற்கொண்ட இலட்சியப் பயணத்தில், கலைஞர் விட்ட இடத்திலிருந்து தொடருவோம். ஆயிரம் காலத்துப் பயிரான திராவிட இயக்கத்தையும், அதன் கொள்கைகளையும், தலைவர் கலைஞர் மீது ஆணையிட்டு காப்போம், வெற்றியை நோக்கி விரைந்திடுவோம் என்று சூளு ரைத்தார் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கொள்கையே இல்லாத கட்சிகளும் உண்டு. அவர்கள் குறித்து நாம் அக்கறை செலுத்த வேண்டியதில்லை. கொள்கை அளவில் நமக்கு உற வாகவும், எதிராகவும் இருப்ப வர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைத்தும் எதிர் கொண்டும் நின்றதில் தலைவர் கலைஞர் அவர்களின் அரசியல் மாண்பு போற்றுதலுக்குரியது. அதனால்தான், மாறுபட்ட கொள்கை கொண்டவர்களும் அந்த மாண்பை நெல்லை மேடையில் பாராட்டினார்கள்.

தன் இறுதி மூச்சு அடங்கிய பிறகும் மானமிகு சுயமரியாதைக் காரராகவே விளங்கிய தலைவர் கலைஞர் அவர்கள், கடைசி வரை சமூக நீதிக்காகப் பாடுபட்டு வெற்றி கண்டது, ஒடுக்கப்பட் டோர் உரிமைகளைப் பாது காத்தது, பெண்களுக்கு சமூக - பொருளாதார விடுதலையை உருவாக்கியது, ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தபோதெல்லாம் நெருக்கடி சூழல்களை எதிர்த்து நின்றது, மாநில உரிமைகளுக் காகக் குரல் கொடுத்தது மட்டுமின்றி, சென்னையை இந்தியா வின் அரசியல் தலைநகரம் போல மாற்றிக்காட்டி டெல்லி அரசியலை சுழல வைத்தது, தமிழுக்கும் தமிழருக்கும் ஆற்றிய தொண்டு, தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய புரட்சிகரமான சட்டங்கள் - திட்டங்கள் எனப் பட்டியலிடு வதற்கு ஒரு கடிதம் போதாது என்கிற அளவிற்குத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றியுள்ள பணியினை அனைத்துக் கட்சித் தலைவர்களும் உளப்பூர்வமாக எடுத்து ரைத்து, அந்த மாபெரும் தலைவருக்கு “பாரத ரத்னா “ பட்டம் வழங்க வேண்டும் என்பதையும், அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும், எந்நாளும் அவர் புகழ் போற்றப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைத் திருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவர்கள் அனை வருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

கலைஞர் ஒரு சகாப்தம். அரசியல் ஆளுமைமிக்க அந்த சகாப்தம் பற்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் நெல்லையிலே நினை வுரை வழங்கி புகழ் மாலை சூட்டியுள்ள நிலையில், வருகிற 30ந் தேதி தமிழகத் தின் தலைநகர் சென்னையிலே அகில இந்திய அரசியல் தலைவர்கள் புகழ் வணக்கம் செலுத்தவிருக்கிறார்கள்.

எல்லையில்லா புகழ் மழை யாய் நெல்லையில் பொழிந்த தலைவர்களின் உரைகளும், சென்னையில் நிகழவிருக்கும் நினைவேந்தலில் வெளிப்படவுள்ள முழக்கங்களும் தலைவர் கலைஞர் அவர்களால் திராவிட இயக்கம் பெற்ற வெற்றியின் அடையாளம். தமிழ்நாடு பெற்ற நாகரிக உயர்வின் வெளிப்பாடு. இந்திய நாட்டிற்கு வழிகாட்டிய ஜனநாயக விளக்கு. இந்த உரை களையெல்லாம் சிறு புத்த கங்களாக வெளியிடுவதுடன், நவீன தொழில்நுட்பமான  சமூக வலைத்தளத்திலும், இணையத் திலும் இவற்றை சிறுசிறு பகுதிகளாகப் பதிவேற்றி, கழகத்  தொண்டர்களிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதற்கான பணியை உங்களில் ஒருவனான நான் கவனத்துடன் செயல் படுத்துவேன். வான் உள்ள அளவும், நீர் உள்ள அளவும், நிலம் உள்ள அளவும், அதில் தமிழ் உள்ள அளவும், கடைசித் தமிழன் உள்ள அளவும் நிலைத்து நிற்கும் கலைஞரின் புகழைப் பாடுவோம். பெரியார் - அண்ணா வழியில் அவர் மேற் கொண்ட இலட்சியப் பயணத்தை அவர் விட்ட இடத்திலே இருந்து தொடருவோம். ஆயிரம் காலத்துப் பயிரான திராவிட இயக்கத்தையும் அதன்  கொள்கை களையும் தலைவர் கலைஞர் அவர்களின் மீது ஆணையிட்டுக் காப்போம்!. வெற்றியை நோக்கி விரைந்திடுவோம்!

பெரியார் அருங்காட்சியகத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,  துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மேனாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு,. உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு எம்எல்ஏ, புரசை ரங்கநாதன் எம்எல்ஏ., மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ.,  மற்றும் தோழர்கள். (28.8.2018, பெரியார் திடல்)

அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மரியாதை (28.8.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner