எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.29 திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ராகுல்காந்தி: திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு எனது வாழ்த்துகள். அரசியலில் நீங்கள் (மு.க.ஸ்டாலின்) தொடங்கும் புதிய அத்தியாயம் மகிழ்ச்சியுடன் வெற்றிகரமாக அமைய வாழ்த்து கிறேன்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள் ளதற்கு வாழ்த்துகள்.

சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): மு.க.ஸ்டாலின் தனது கடுமையான உழைப்பின் மூலம் 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் திமுகவில் பல்வேறு பொறுப்புகளைப் படிப்படியாகப் பெற்று அக்கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது மிகமிகப் பொருத்தமாகும். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் அமைத்துக் கொடுத்த அரசியல் பாதையில் ஸ்டாலின் பீடுநடை போட்டு கட்சியை வளர்ச்சிப் பாதையில் நிச்சயம் அழைத்துச் செல்வார்.

வைகோ (மதிமுக): திமுக இளைஞரணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என தனது கடும் உழைப்பால் படிப்படியாக உயர்ந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் தலைவர் கலைஞர் உடல்நலம் குன்றியிருந்தபோது செயல் தலைவர் பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தினார்.

இன்றைக்கு திராவிட இயக்கம் அறை கூவல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கத்தைப் பாது காக்கவும், தமிழகத்தின் நலன் காக்கவும் திமுக தலைவர் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். அவருக்கு வெற்றி மேல் வெற்றி குவிய வாழ்த்துகள்.

அதுபோல திமுக பொருளாளர் பொறுப்பை ஏற்றுள்ள நண்பர் துரைமுருகனுக்கும் வாழ்த்துகள்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): தமிழகமும், இந்திய தேசமும் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த கால கட்டத்தில் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்த சவால்கள் அனைத்தையும் இடதுசாரி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து எதிர்த்துப் போராடும் கடைமையை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அவர் அடிப்படை தொண்டராக இருந்து, படிப்படியாக முன்னேறி, தலைவராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் கலைஞரின் வழியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோருக்காக தொடர்ந்து பாடுபட வாழ்த்துகள்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): திமுக என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்ற கொள்கை வெளிச்சத்தில் கட்சியை மட்டுமின்றி வெகு விரைவில் நாட்டையும் வழி நடத்த வாழ்த்துகிறோம்.

ஜி.கே.வாசன் (தமாகா): மு.க.ஸ்டாலின் இளம் வயது முதல் கடின உழைப்பால், தொடர் பணியால், விடாமுயற்சியால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர். படிப்படியாக தான் சார்ந்திருக்கும் கட்சியில் முன்னேறி தந்தை வழியில் அவர் தடம் பதித்தவர். அதன் தொடர்ச்சியாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளதற்கு உளம் நிறைந்த வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): திமுகவின் இரு முக்கியப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவருமே 50 ஆண்டுகால அரசியல் வரலாறு கொண்டவர்கள். நண்பர் ஸ்டாலின் இளைஞர் அணியிலும், துரைமுருகன் மாணவர் அணியிலும் பொது வாழ்க்கையைத் தொடங்கி இப்போது இந்த உயரத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி.

நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக்): எமர்ஜன்சியை எதிர்த்து சிறை சென்றவரும், மேயராக, துணை முதல்வராக, எதிர்கட்சித் தலைவராக, திமுகவில் இளைஞரணி பொறுப்பிலிருந்து செயல் தலைவர் பொறுப்பு வரை வகித்தவருமான மு.க.ஸ்டாலின், திமுக தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டுள்ளது பொருத்தமானது, பாராட்டுக்குரியது.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner