எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஆக.29 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர் களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த பள்ளி விழாவில் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பேசியது:

பள்ளி மாணவர்களின் கல்வித் திறனுடன், அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் தொடக்கமாக அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாண வர்களுக்கு 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக் கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் முதல்கட்ட மாக 3 ஆயிரம் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளன. நீட் தேர்வில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழகமெங்கும் 412 மய்யங்களில் 3,600 ஆசிரியர் களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் அமைச்சர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner