எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி மு.க.ஸ்டாலின் பிரகடனம்

சென்னை, ஆக.29, பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, திராவிட இயக்க சிந்தனைகள் அடிப்படையில் பணி  தொடருவோம் - நாடு முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடிஅரசுக்குப் பாடம் புகட்டுவோம் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 28.8.2018 அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் ஏகோபித்த ஆதரவோடு தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆற்றி உரை வருமாறு:

இந்த  மேடையில்,  இந்த  கூட்டத்தில் எனக்கு ஒரே ஒரு குறைதான். இந்த காட்சியைப் பார்க்க தலைவர் கலைஞர் அவர்கள்இல்லையே என்பதே அந்த குறை.

வாழும் திராவிடத்தூண் பேராசிரியர்!

இருந்தாலும்,  தலைவர் கலைஞர்அவர்கள் இடத் தில் நம்முடைய பேராசிரியர் அவர்கள் இருக்கிறார்கள். வாழும் திராவிடத்  தூணாக   பேரா சிரியர் அவர்கள் இருக்கிறார்.  எனக்கு  அக்கா  உண்டு, அண்ணன்  இல்லை,  பேராசிரியர்தான் உடன் பிறவா அண்ணன் என்று பல முறைகலைஞர்   குறிப்பிட்டுள்ளார்.   எனவே, எனக்கு  பேராசிரியர்  அவர்கள்  பெரியப்பா. அப்பா  இல்லை  என்றாலும்  பெரியப்பாஇங்கே இருக்கிறார்.

அப்பாவுக்கு  முன்பே  என்னைத்  தலைவராக  முன் மொழிந்தவர் பெரியப்பா பேராசிரியர்  அவர்கள் தான்.  அப்பாவிடம் நல்ல பேர் வாங்குவது நூறு மடங்கு சிரமம் என்றால், பெரியப்பாவிடம் நல்ல பேர் வாங்குவது இருநூறு மடங்கு சிரமமானது என்பது எனக்கு நன்றாக தெரியும்.

தலைவராக தேர்வு பெறுவது

பெருமையாக இருக்கிறது!

அடுத்த  தலைவர்  தலைமைக்கானதகுதி  ஸ்டாலினுக்குத் தான்  இருக்கிறது என்று  பேசியவர் பெரியப்பா  பேராசிரியர் அவர்கள். அந்த பேராசிரியருக்கு முன்னால் நின்று தலைவ ராக தேர்வு பெறுவதை நான்பெருமையாகக்  கருதுகிறேன்.

இந்தக்  கூட்டத்திற்கு  நான்  வந்ததும்அரங்கத்துக் குள் இருப்பவர்களின் முகத்தை  நான்  பார்த்தேன்.  என்னைப் பள்ளிப்  பிள்ளையாக  பார்த்தவர்கள்  இங்கு இருக்கிறார்கள்.

முற்றிலும் புதிய எதிர்காலத்தை நோக்கி

கழகத்தை அழைத்துச் செல்வேன்!

கல்லூரி  மாணவனாகப் பார்த்தவர்கள் இங்கு  அமர்ந்து  இருக்கிறீர்கள்.  கழக பேச்சாளராக,  இளைஞரணி  செயலா ளராக,  சட்டப்பேரவை  உறுப்பினராக,  மேயராக, அமைச் சராக,  துணை  முதல்வராக,  பொருளாளராக,  செயல்  தலை வராக  என  எனது வளர்ச் சியை  படிப்படியாக பார்த்தவர்கள் இங்கு இருக்கிறீர்கள். படிப்படியாக நான்வளர வேண்டும் என்றுதான் கலைஞரும்  விரும்பினார். நானும்  அப்படித்தான் நினைத்தேன்.

கலைஞரின் மகன் என்று  சொல்லிக்  கொள் வதை விட  தலைவர் கலைஞரின்  தொண்டன் என்று  சொல் லிக்  கொள் வதில் தான்  மகிழ்ச்சியடைந்தேன்.  திராவிட முன்னேற்றக் கழகம் எனும் 70 ஆண்டு வரலாற்றை  நெஞ்சில்  சுமந்து கொண்டு  முற்றிலும்  புதியதொரு எதிர்காலத்தை நோக்கி கழகத்தையும்,  தமிழினத்தையும்  அழைத்துச்  செல்லநான் நினைக் கிறேன்.

பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும்  நான்கு  தூண்களால் எழுப்பிய  கோட்டை  நம்முடைய  திராவிட முன்னேற்றக்  கழகம்.  சுயமரியாதை எனும் முதுகெலும்பில்லாத மாநில  அரசையும், சமத்துவத்தையும்,  சமூக  நீதியையும்,  பகுத்தறிவுச்  சிந்தனைகளையும்  சிதைக் கும் மத்திய  அரசையும்  பார்க்கும்  போது  நமக்கெல்லாம்   வேதனை தந்து கொண்டிருக்கிறது.

மக்களாட்சி மாண்பைக்

குலைக்கும் மத்திய அரசு!

இன்றைக்கு  நிலவும்  அரசியல்  சமூக சூழ்நிலைகள்  சுய  மரியாதை  கொள்கைகளுக்கு  ஏற்பட்டுள்ள  ஆபத்து  பெரும் சவாலாக  நிலவுகின்றன.  கல்வி,  கலை, இலக்கியம், மதம் ஆகியவற்றின் அடிப் படைகளெல்லாம்  அதிகார  பலத்தால்,  மத  வெறி யால்  அழித்திட  மத்திய  அரசு  முயன்று வருகிறது.   நீதித்துறை,   கல்வித்துறை மாநிலங்களில் கவர்னர்களை தேர்ந்தெடுக்கும்  முறைகள்  அனைத்தும் மக்க ளாட்சியின்  மதச்சார்பற்ற  கொள்கைகளின் மாண்பை  குலைக்கும் செயல்களாகவே அமைந்து  கொண்டிருக்கின்றன.

பகல் கொள்ளைகளில்  அ.தி.மு.க.  அரசு!

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின்  தொலை  நோக்குப்  பார்வையில்  துவங்கி வைக்கப்பட்ட திட்டங்கள்அனைத்தையும்  தங்கள் சுயநலம்  ஒன்றிற்காகவே  தாரை  வார்த்து  மாநில மக்களின் நலன்கள் அனைத்தையும் காவு கொடுத்து, சுய மரியாதையை  முழுவதுமாக  அடகு வைத்து,  இன்னும்  அண்ணா  பெயரையும்தாங்கிக்  கொண்டு  தமிழக  மக்களின்அனைத்து  நலன்களையும்  கூறு போட்டு பங்கிட்டு  கொள்ளும்  பகல்  கொள் ளைகளில்  அரசு  என்ற  பெயரால்  நிலவிக் கொண்டி ருப்பதை இதயத்தில் ரண வலியோடு கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்த  சமூகத் தீமைகளை  அகற்றி  தமிழகத்தை  திருடர்கள் கையிலிருந்து விடுவிப்பது நம்முடைய  முதல்  கடமையாக இருந்திட வேண்டும்.

நம் நாட்டின் இன்றைய மாபெரும் ஆபத்தெனக்  குறிப்பிட்டால்  கொள்கைகளே அறியாத,  இல்லாத  பதவி களையும் அவற்றின் அனுகூலங்களையும்  மட்டுமே  குறி வைத்து இயங்கும் அரசியல் கட்சிகள் தான்.

தமிழகத்தின்  இன்றைய  ஆட்சியாளர்கள்  பற்றி  நினைக் கும் போது  “நெஞ்சு பொறுக்குதிலையே  இந்த  நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், அஞ்சி யஞ்சிசாவார் இவர் அஞ்சாத பொரு ளில்லைஅவனியிலே”  என்கிற  பாரதியின்  வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தின்   தலையைக்   குனியச்செய்து, லாபங் களை பொறுக்கிக் கொண்டு தன்மானம்   இல்லாது   இயங்கி வரும் அரசின் அவலங்களை நாம்  அனைவரும் தினமும்  ஏதாவது ஒரு  வழியில்  பார்த்துக் கொண் டிருக்கிறோம். வெளியில் இருக்கும் போராட்டங்களுக்கு  நாம்  தயாராகும்  முன்நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள்  இருக்கும்  குறைகள்  என்ன?  காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள  வேண்டிய மாற்றங்கள்  எவை?  இந்தக்  கேள்விகள்என்னை சில நாட்கள் தூங்க விடவில்லை.

விழித்துக்   கொண்டே   ஒரு   கனவுகண்டேன்.  ஓர்  அழ கான  எதிர்காலத்தைநான் கனவு கண்டேன்.

இந்த  நாளில்  அந்த  கனவின்  சில துகள்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் - நம் கழகம் - நம் தமிழினம்  -  நம்  நாடு  -  நம்  உலகம்  இவை அனைத்தும்  புத்தம்  புதியதாய்,  பேரழகாய் மகிழ்ச்சியில் வாழும் கனவு அது.

மாற்றங்கள் நம்மிடம்இருந்து தொடங்கட்டும்!

காலத்தின் மாற்றங்களுக்கேற்ப தம்மை  மாற்றிக் கொள்ளா  விலங்கோ, இனமோ  இந்த  மண்ணில்  நீடித்திருப்பதில்லை.  மாற்றங்கள்  நம்மில்  இருந்து தொடங்கட்டும்.  இன்று  நீங்கள்  பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான். “புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான்.”

திராவிட  முன்னேற்றக்  கழகத்தின்  மரபணுக்க ளோடும், நல்லதொரு எதிர் காலத்தை உருவாக்கும்   கனவுகளோடும்   இதோ உங்கள் முன்னால் பிறந்தி ருக்கிறேன். என்னோடு உடன் பிறந்திருக் கக் கூடிய கோடிக் கணக்கான  உங்கள்  அனைவருக்கும்  என் வாழ்த்துக்கள்!  இது  புதிய  நாம்!  அந்த அழகான  எதிர்காலத்தில்  யார்  நம் கழகத்தினர்?

தன் ஜாதியே உயர்ந்தது   என்று  நினைப் போர் அல்லர். உலகில் பிறந்த ஒவ் வொரு உயிரையும் தன் உடன் பிறப்பாக நினைப் போர். எளியோருக்கு கரம் கொடுப்போர்.

கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. தாம் நம்பவில்லை  எனினும்  பிறரின்  நம்பிக் கையை  மதிப்போர்.  யார்  தவறு  செய் தாலும் அது நான் என்றாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்போம். அந்த அழகான எதிர் காலத்தில் நம் கழகத்தின் கொள்கைகள் என்ன?

எதிர்காலம் தூரத்தில் இல்லை!

இந்த நொடியிலிருந்து

மெய்ப்படப் போகிறது!

பகுத்தறிவு  என்பது  அறிவெனும்விழி  கொண்டு  உலகை  காண்பது  என்பதை  உரக்கச்  சொல்லுதல்.  ஆணுக்கு பெண்  இங்கு  சமம்  என  மதித்தல். திரு நங்கையர்,  மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சம உரிமை பெற்றுத்தருதல். தனி  மனித  மற்றும்  ஊடகக்  கருத்துச் சுதந்திரத்தை  மீட்டெடுத்தல்,  கருத்துச் சுதந்திரத்தை  போற்றிப்  பாதுகாத்தல். பிற மொழிகளை  அழித்து  இந்தியா  முழுவதுக்கும்  மதச்சாயம்  பூச  நினைக்கும் கட்சிகளை  எதிர்த்தல்.  இவை  எல்லாம் என்  நீண்ட  கனவின்  சில  துகள்கள். இந்த  எதிர்காலம்  தூரத்தில்  இல்லை. இதோ  இந்த  நொடியிலிருந்து  மெய்ப்படப் போகிறது.

இந்தக் கனவை முழுமையாக மெய்ப் பிக்க  நான்  துடித்துக்  கொண்டிருக்கிறேன்.  அதை  தனி  மனி தனாக  என்னால் செய்ய இயலாது என்பதையும் நான் அறிந்தே  பேசிக்  கொண்டிருக் கிறேன். என்   உயிரி னும்   மேலான   தலைவர் கலைஞர்  அவர்களின்  அன்பு  உடன் பிறப்புகளே, நீயில்லாமல் என்னால் இந்த பெருங்கனவை மெய்ப்பிக்க முடியாது.

இது  என்  கனவு  மட்டுமல்ல,  நம்  கனவு. நம் கழகத்தின் கனவு. ஏன், இந்த தமிழகத்தின்  கனவு  அது  தான்.  வா!  என்னோடுகை கோர்க்க வா!

நாடு முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும்  மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம்

ஒன்றாக முன்னேற மட்டுமல்ல, தேவைப்பட்டால்  சில  அடிகள்  பின்னே  வைக்க, இயற்கை பிற உயிர் களுக்காக சில அடிகள் பின்னே வைப்பது முன்னேற்றமே!

வா!   இந்தியா முழுவதும் காவி வண்ணம்  அடிக்க நினைக்கும்  மோடி அரசுக்கு  பாடம்புகட்ட வா! முது கெலும்பில்லாத இந்த மாநில அரசைதூக்கி  எரிய  வா! இந்த  அழகான எதிர்காலத்தைஒன்றாக நாம் மெய்பிப் போம்!

தி.மு.கழகத்தின் தொண்டன் நான்!

நான்  முன்னே  செல்கிறேன். நீங்கள் பின்னே வாருங்கள் என்று நான் அழைக்க வில்லை. நாம்  அனைவரும்  சேர்ந்தே  செல்வோம்  என்று  அழைக்கிறேன்.  இந்தக்  கூட்டத்தில்  இருக்கும்  மூத்தோர்  அனைவரும் என்  அண்ணன்கள்,  அக்காள்கள்.  இளையோர்  அனைவரும்  என்  தம்பிகள்,  தங்கைகள்.  இனி  இதுதான்  நம்முடைய  குடும்பம். இதுதான் என்னு டைய குடும்பம்.

தலைமைக் கழக நிர்வாகிகளோ, முன்னாள் அமைச்சர் களோ,  மாவட்டச் செயலாளர்களோ, மாவட்டக் கழக நிர்வாகி களோ, வட்டக் கழக, நகரக் கழக, ஒன்றியக்கழக   நிர்வாகி களோ,   ஏன்,   பதவிகள் இல்லாமல்  மக்கள்  பணியாற்றும்  உறுப்பினர்களோ   தலைமைக்கு   அனைவரும்ஒன்றுதான். திராவிட முன் னேற்றக் கழகத்தின்  தொண்டன்.  நானும்  ஒரு  தொண்டன்தான். இங்கு அனைவரும் சமம்.

யார்  பெரியவர்  என்ற  போட்டியில்  சுயநலத்தில்  கட்சியின்  எதிர்காலம்  குறித்தும் கவலைப்படாதவர் களாக  யாரும்  ஆகி விடக்கூடாது.   அதற்கு   தலைமைக்கு கட்டுப் பட்டவர்களாக  நீங்கள் இருக்க வேண்டும்.  உங்களின்  எண்ணங்களின்பிரதிபலிப்பாகத்  தலைமை  நிச்சயமாக இயங்கும்! இயங்கும்! இயங்கும்!

கழகத்  தோழர்களே!  இது  காலத்தின்பேரழைப்பு.  தலைமை  ஏற்கும்  கடமையும், கட்டாயமும் நம்மை அழைக் கிறது. இந்த  அழைப்பு  தென்றலை  தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு! ஓடுவோம், ஓடுவோம்  வாழ்க்கை  நெறி  முறைகளின்ஓரத்திற்கே   ஓடுவோம்!   நம்சொந்த நலன்களை  மறந்து  தமிழ்நாட்டின்  தமிழ் மக்களின் நன்மைகளுக்காக உழைப்போம். உழைப்போம்.  வெற்றி  அடையும்  வரை உழைப்போம். உலகமே  வியக்கும்  சமூகநீதிக்  கொள்கைகளின் தாய் வீடாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்.  தந்தை பெரியார் அவர்கள்  நமக்கு கற்றுத் தந்த சுய மரியாதை, பெற்றுத்  தந்த  சமத்துவம்  இவற்றி  லிருந்துநாம்  ஒரு  நாளும்  பின்  வாங்கப் போவதில்லை.

கலைஞர் இல்லாத மேடையை

நான் கனவில் கூட கண்டதில்லை!

நான்  சிறுவனாக  இருந்த  போது  பேரறிஞர்  அண்ணாவின்  குரலை  மேடை  அருகே ஒலி வாங்கி பிடித்து, பதிவு செய்து கொண்டபோது நான் மேடையேறிப் பேசுவேன் என்று கனவில் கூட எண்ணியதில்லை.

நான்  இளைஞனாக  இருந்த  போது,  நம்தலைவர் கட்சி நடத்தும் ஆற்றலை தூரத்தில் இருந்து  பார்த்து  வியந்து  கொண்டிருந்தபோது, என்றோ ஒரு நாள் இந்தக் கட்சியின் தலைமை ஏற்பேன் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை.

அவர்  இல்லாத  எங்கள்  கோபாலபுரம் வீட்டை, அவர்  இல்லாத  இந்த  அறிவாலயத்தை, அவர்  இல் லாத  இந்த  மேடையை கனவில் கூட நாம் கண்ட தில்லை.

இத்தனை   பெரிய   பொறுப்பை,   50ஆண்டு  வர லாற்றை  என்  சிறிய  இதயத்தில் ஏற்றி  வைத்துவிட்டு,  நம்முடைய  தலைவர்ஓய்வெடுக்கச் சென்று விட்டார் என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

என்னுள் துடிக்கும் இதயம்கலைஞர் தந்தது!

என்னுள் துடிக்கும் இதயம் அவர் தந்தது.அவர்  அண்ணா  விடம்  வாங்கிய  இதயம்அது.  எதையும்  தாங்கும்  இதயம்  இதைத்தாங்காதா?

என்  கடைசி  மூச்சு  உள்ளவரை,  என்கடைசி  இதயத்  துடிப்பு  இருக்கின்ற  வரை,என்   உயிரினும்   மேலான   தமிழி னமே உனக்காக  நான்  உழைப்பேன்.  உனக்காகநான்  போரா டுவேன்  என்ற  உறுதி மொழியுடன் விடை பெறுகிறேன்.

அதேபோல், ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டிருக் கக்கூடிய,  நம்முடைய பொருளாளர்  அண்ணன்  துரை முருகன் அவர்கள்,  பேசுகிற போது  சொன்னார் கால்சட்டை  போட்டுக் கொண்டு  பள்ளிக்கூடத்திலே  படித்துக்  கொண் டிருந்த,  ஒரு சின்னஞ் சிறுவனாக     என்னை     அவர் பார்த்தது,  அந்த  காட்சிகளையெல் லாம் அவர் விவரித்து சொன்னார்.

என்னைத் தூக்கி வளர்த்தவர்களில்அவரும்    ஒருவர். உங்களையெல்லாம்நம்பித்தான் இங்கே இருக்கக் கூடிய அத்தனை  பேரையும்  நம்பித்தான்,  இந்த பொதுக்குழு  கூட்டத் திற்கு  வரமுடியாதநிலையில்  இருக்கக் கூடிய  இந்த  இயக்கத் திலே  அத்தனை  தொண்டர்களுடைய உணர்வில் நம்பிக்கை வைத்துத்தான் இந்த பொறுப்பை  நான்  ஏற்றுக் கொண்டி ருக்கின்றேன்.  இந்த  தைரியத்தை, இந்த தெம்பை எனக்கு  இப்படி  வழங்கியிருப்பதற்கு, யார்காரணம் என்று சொன்னால்,  அதுவும் நம்முடைய  தலைவர்  கலைஞர்தான் கலைஞர்தான்.

இவ்வாறு  திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அவர்கள்  உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner