எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.30  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில்  சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங் களது சான்றிதழ்களை அரசு இ-சேவை மய்யங்கள் மூலம் ஆன்லைனில் வியாழக் கிழமை முதல் பதிவேற்றம் செய்யலாம்.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  குரூப் 4-இல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை கடந்த பிப்.11-ஆம் தேதி நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை (தரவரிசைப் பட்டியல்) ஜூலை 30-ஆம் தேதி வெளியிட்டது. இதையடுத்து சான்றிதழ் பதி வேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர் களின் பட்டியல் ஆக.27-ஆம் தேதி தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முக வரிக்கு இது குறித்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் ஆக.30-ஆம் தேதி முதல் செப்.18-ஆம் தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மய்யங்களில் மட்டுமே சான்றி தழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்தச் சேவைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள அரசு இ-சேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணை யத்தின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப் பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு அதற்குரிய சான்றிதழ்களை கண்டிப்பாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  ஒருவேளை விண்ணப்பத்தில் தவறான தகவல்களை பதிவு செய்து, அதற்கான சான்றிதழ் அவர்களிடம் இல்லை எனில் தங்களிடம் சான்றிதழ் இல்லை என்பதைக் குறிப்பிட்டு தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவ லருக்கு ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு அதனை ஸ்கேன் செய்து உரிய இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அரசு இ-சேவை மய்யங்கள் அரசு விடுமுறை நாள்களில் செயல்படாது என்பதாலும் மேலும் இந்தத் தெரிவுக்கென தோரயமாக 33,000 விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இருப்பதாலும், விண்ணப்பதாரர்கள் கடைசி நாள்வரை காத்திருக்காமல் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள ஏதேனும் சில விவரங்களுக்கு மட்டும் உரிய சான்றிதழ்களைப் பதி வேற்றம் செய்யவில்லை எனில், அவர்களது விண் ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 ஆகிய தொலைபேசி எண்களிலும்,  1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியி லும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner