எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.30 கல்லீரல் பாதிப்புக்கு சோதனை முறையில் ஸ்டெம் செல் சிகிச்சை அளிப் பதற்காக மத்திய அரசின்  அனு மதி கோரி ஸ்டான்லி அரசு மருத் துவமனை விண்ணப்பித்துள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனை யில் 2009-ஆம் ஆண்டு முதல் ஸ்டெம் செல் குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன. தொப்புள் கொடி, எலும்பு மஜ்ஜை ஆகியவற்றி லிருந்து சேகரிக்கப்படும் ஸ்டெம் செல்களின் வகைகள், அதன்  தன்மைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் கல்லீரல் பாதிப்புகளுக்கு தீர் வளிக்க முடியும் என்று கண்டறி யப்பட்டுள்ளது.   முதல் கட்ட மாக  எலிகளின் கல்லீரலில் சோதனை முயற்சி மேற்கொள்ளப் பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஸ்டெம்செல் களை மனிதர்களின் கல்லீரல் பாதிப்புகளுக்கு சோதனை முறையில் பயன்படுத்த மத்திய அரசின் அனுமதிக்காக  விண் ணப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அனுமதி பெறுவதற்கு தேவையான,  தரமான ஆய்வக வசதிகள் ரூ.8.5 கோடி செலவில்  அமைக்கப்பட் டுள்ளது. இந்தியாவிலும் ஒரு சில மருத்துவ நிறுவனங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. தமிழகத்தில்  ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும்தான் இந்த வசதி உள்ளது.

இது தொடர்பாக மருத்து வர்கள் கூறியது: இந்தியாவில் ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்தம் தொடர்பான நோய்களுக்கு மட்டுமே, ஸ்டெம்செல் சிகிச்சை முறையை  பின்பற்ற அனுமதிய ளிக்கப்பட்டுள்ளது. பிற சிகிச் சைக்கு ஸ்டெம்செல்லைப் பயன் படுத்தும் முன் மத்திய அரசிடம் அனுமதி பெற  வேண்டும் என்பதும், அந்த சிகிச்சைகளுக்கு நோயாளிகளிடம் இருந்து கட்ட ணம் வசூலிக்க கூடாது என்பதும் விதி. எனவே,  மனிதர்களின் கல்லீரல் பாதிப்புகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி மத்திய அரசிடம் விண் ணப்பித்துள்ளோம்.  அனுமதி கிடைக்கும் பட்சத்தில், தீவிர கல் லீரல் நோயாளிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சையைப் பயன்படுத்த முடியும். இதன்  மூலம் சிலருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதைக் கூட தவிர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner