எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, ஆக.30 தமிழகத்தில் காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் வசம் உள்ள பொதுப்பணித் துறை தோல்வி அடைந்துவிட்டது என்றார் இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்.

புதுக்கோட்டையில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில்    செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண  வேண்டும்.

தமிழகத்தில் காவிரி நீர் கரைபுரண்டு சுமார் 100 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. மறுபுறம் கடைமடைக்கு தண்ணீர் வேண்டுமென விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு நிதி மோசடியும், பொதுப்பணித் துறை அலுவலர்களின் அலட்சியமுமே காரணம். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வசம் உள்ள பொதுப்பணித் துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம்  அணிய வேண்டும் என்பது ஏற்புடையது. ஆனால், அதை  கட்டாயமாக்க கால அவகாசம் அளிக்க வேண்டும். அரசியல் பாகுபாடு காட்டாமல் கேரள மக்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி அளிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அதிமுக அரசின் நோக்கம். இக்கட்சியினருக்கு தோல்வி பயம் இருப்பதால் இந்த ஆட்சி இருக்கும் வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலே நடைபெறாது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner