எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

திருச்சி, ஆக.30 திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளி 40 ஆவது ஆண்டு விளையாட்டு விழா 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவர்களிடையே 25.8.2018  அன்று மாலை 3.30 மணியளவில் பள்ளி வளாக விளையாட்டு அரங்கில் பெரியார் கல்வி குழுமங்களின் தலைவர் வீ.அன்பு ராஜ் தலைமையில், கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் ஆர்.தங்கத்தாள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச தடகள வீரர்  வி.கே. இலக்கிய தாசன்   கலந்து கொண்டு பள்ளி  கொடியினை ஏற்றி வைத்து,  பலூன்களை பறக்கவிட்டு, விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் யுனைஸ் பள்ளியின் விளையாட்டு ஆண்ட றிக்கையை வாசித்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்  வி.கே.இலக்கியதாசன் பேசுகையில்,

எல்லோரும் நினைத்து கொண்டிருப் பார்கள். விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு என்று. அது உடலை வருத்தி நாம் பண்ணுகிற மிகப் பெரிய உழைப்பு. நீங்கள் தொடர்ந்து முயற்சிகள் செய்து கொண்டே இருங்கள் வெற்றி கிடைக்கும்.

என்னை பற்றியும் சொல்ல வேண்டு மென்றால் நான் இந்த இடத்தை அடை வதற்கு 11 ஆண்டுகள் உழைத்தேன்.  கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த இடத்தை அடைய முடிந்தது. நிறைய முறை தோல்வி அடைந்திருக்கிறேன்.விழும் போது விதைகளாகவும், எழும்போது மரமாகவும் வரவேண்டும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் அதிகளவில் பங்கேற்க வேண்டும். தோல்விகளை கண்டு துண்டுவிடாமல், மாணவர்கள் தொடர்ந்து  ஈடுபட்டால் வெற்றி கிடைக் கும், விளையாட்டில் ஈடுபட்டால் ஒழுக்கம் மேம்படும் என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து மாணவ, மாணவி யரின் பல்திறன் உடற்பயிற்சிகள், சிலம் பம், தடகள போட்டி, பிரமிடு போன்றவை நிகழ்த்தி காட்டினர். இவை பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் பல்திறன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் இலக்கியதாசன் வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் பள்ளியில்  நான்கு விளையாட்டு குழுக்களாக பிரித்து அதில் பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, ஹவுஸ் டிரில் சிறப்பாக செய்த பச்சை அணிக்கும், சிறந்த அணிவகுப்புக்கான  கோப்பை நீலநிற அணிக்கும் மற்றும் சிகப்புஅணிக்கும், சிறந்த கட்டுக்கோப் பிற்கான ஒட்டுமொத்த சுழற்கோப்பை

மஞ்சள் அணிக்கும் வழங்கப்பட்டது.

விழா நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியைகள் திருவேணிலதா, பிலோமினா பென்னி, ஆசிரியர் அந்துவான் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இவ்விழாவில் பெரியார் மெட்ரிக் மேனிலைப் பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைமை யாசிரியர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர், ஆசிரியைகள்,   மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner